ஃபுல் மெட்டல் ஜாக்கெட் (1987) படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் "ப்ரைவேட் பைல்", அவரை பயிற்சியில் அப்படி துன்புறுத்திய Gunnery Sargent ஹார்ட்மேனை கொன்று, பின்னர் தற்கொலை செய்து கொண்ட காட்சி நம்மால் என்றும் மறக்க முடியாது.
ராணுவப் பயிற்சியின் முக்கிய அம்சமே தனிநபர்களை சுக்கு நூறாக உடைப்பது தான், பிறகு அவர்களை மீண்டும் ஒரு போர்வீரனாக உருவாக்குவது தான் பயிற்சி , இப்பயிற்சியில் மோசமான வீரர்களை வடிகட்டுவது தலையாய பணி,
படத்தில் அந்த சிறிய ஜெல்லி டோனட்டின் பங்கு தான் எத்தகையது? ராணுவத்துக்கு பொருந்தாத பருத்த உடல் கொண்ட , புத்தி மந்தமான பிரைவேட் பைலை சிறுமைப்படுத்தி முற்றிலும் முடிக்கும் நிலைக்குத் தள்ளுகிறார் பயிற்சியாளர் ஹார்ட்மேன் , இனி ப்ரைவேட் பைல் செய்யும் தவறுகளுக்கு மொத்த பயிற்சி படைக்குழுவினருக்கும் தண்டனை என்று கடும் ட்ரில் பயிற்சியை அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தண்டனையாகத் தருகிறார்.
அடுத்த நாள் இரவு ப்ரைவேட் பைல் உறங்குகையில் மொத்த பயிற்சிப்படை சகாக்களால் முகம் மூடப்பட்டு , தத்தம் பூத்துவாலைகளில் சோப் வைத்து சுற்றி தர்ம அடிவாங்குகிறார்,
விதிர்விதிர்ந்து போகிறார், விரைவில் ப்ரைவேட் பைல் துப்பாக்கிப் பயிற்சியில் தள்ளப்படுகிறார், நாளுக்கு நாள் அவர் பயிற்சியில் உக்கிரம்
கொள்கிறார், தன் துப்பாக்கியால் மிகுந்த மனோபலம் பெறுகிறார் , அதனுடன் பேசுகிறார், இரவில் தூக்கம் தொலைக்கிறார் ப்ரைவேட் பைல்.
ப்ரைவேட் பைல் தற்கொலைக்குப் பின்னர் கதை 1968 ஆம் ஆண்டின் வியட்நாம் போர்க்களத்துக்குச் செல்கிறது, அங்கு ப்ரைவேட் பைலுடன் பயிற்சியில் இருந்த "ஜோக்கர்" மற்றும் "கவ்பாய்" இருவரும் சார்ஜென்ட்களாக இணைகின்றனர்,ப்ரைவேட் பைலின் தற்கொலை இவர்கள் இருவரையும் வாழும் காலம் வரை துரத்தியபடியே இருக்கும்.
படை வீரர்கள் முதல் நாளிலேயே வீரர்கள் அல்ல, பயிற்சி முகாமில் இருந்து வெளியேறும் வரை ஒருவர் வீரன் அல்ல, அதுவரை அவர்கள் ஒரு பயனற்ற களிமண் ,
ஃபுல் மெட்டல் ஜாக்கெட் படப்பிடிப்பில் நிஜ ராணுவ ட்ரில் பயிற்றுனர்கள் மற்றும் அதிகாரிகள் காட்சியின் நிஜத்தன்மையின் வீர்யத்துக்காக மேற்பார்வை செய்தனர், எனவே பயிற்சிக்காட்சிகள் கொண்ட முற்பாதியில் அத்தனை நிஜமாக பிரமிக்கும் வகையில் நிகழ்த்தியிருந்தார் இயக்குனர் ஸ்டான்லி கூப்ரிக் அவர்கள்.
நான் home video வில் பார்த்த முதல் war movie இது தான், 2004 ஆம் ஆண்டு டிவிடி ப்ளேயர் புகழ் பெறத் துவங்கியது,நான் 3500₹ க்கு அப்போது சாம்சங் DVD player வாங்கி, எளிமையாக creative 5.1 சவுண்ட் சிஸ்டம் இணைத்திருந்தேன்,
அப்போது நல்ல
5 in 1 DVD கள் ஒரிஜினல் டிவிடியில் இருந்து தரவிறக்கி , பர்மா பஜாரில் ஒரு சில கடைகளில் ஆங்கில சப்டைட்டிலுடன் சேர்த்து மிகுந்த தரமாக burn செய்து விற்பார்கள்,
torrent முழு வீச்சில் இந்தியாவில் பிரபலமாகாத காலம் அது, அப்படி 150₹ க்கு வாங்கிய combo டிவிடியில் ஐந்து war movies இருந்தன, அதில் பார்த்த full metal jacket மூலம் தான் இயக்குனர் Stanley Kubrick முழுக்க என் மனதை ஆக்கிரமித்தார், இப்படம் வெளியாகி 15 வருடங்கள் கழித்து பார்க்கையில் கிடைத்த அதிசயம் ,முப்பது வருடங்கள் கழித்துப் பார்க்கையிலும் கிடைக்கிறது,அது தான் auteur உடைய படைப்பின் பலம்.
#stanleykubrick ,#full_metal_jacket