பேரி லிண்டன் | Barry Lyndon | ஸ்டான்லி குப்ரிக் | Stanley Kubrick | 1975

பேரி லிண்டன் கதாபாத்திரம் தான் இயக்குனர்  ஸ்டான்லி குப்ரிக்கின் படைப்புகளிலேயே மிகவும் கவர்ச்சியான கதாநாயகனாக இருக்க வேண்டும் , ஆனால்  பேரி ஒரு கொடுமைக்காரன், ஏமாற்றுபவன் மற்றும் ஒரு முட்டாள் என்று தான் நினைக்கும் படி பின்னப்பட்ட கதாபாத்திரம்.

இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்  நம் நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்பாளி, இயக்குனர்களின் இயக்குனர் அவர்,  மிகுந்த புத்திஜீவி.  
வீரம் என்பது அந்தந்த நேரத்தின்  பேரம் தான், survival of the fittest ற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பேரி லிண்டன் கதாபாத்திரம் .

இயக்குனரின் முந்தைய படைப்பான "தி கில்லிங்" திரைப்படத்தில் ஸ்டெர்லிங் ஹெய்டன் என்ற கதாபாத்திரம் , லொலிடாவில் ஜேம்ஸ் மேசனின் "ஹம்பர்ட்" கதாபாத்திரம்  என இயக்குனர் குப்ரிக் நீண்ட காலமாக ஒழுக்க சிகாமணி தோற்றம் கொண்ட ஊழல்வாதிகளை  தன் படைப்புகளில் நுணுக்கமான கதாபாத்திரங்களாக சித்தரித்துள்ளார்.

A Clockwork Orange' திரைப்படத்தில்  அலெக்ஸ் கதாபாத்திரம் , The Shining's திரைப்படத்தில்  ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட  ஜாக் கதாபாத்திரம், 2001 A Space Odyssey, திரைப்படத்தில் பகுத்தறிவு கொலைகார கம்ப்யூட்டர் HAL 9000 என இயக்குனர் குப்ரிக்கின் அனைத்து படைப்புகளிலும்  கண்ணியமற்ற தொல்லைமிகுந்த நாயகனை வைத்து  பின்னப்பட்ட திரைக்கதைகளைக் கொண்டிருந்தன.

இந்த நாயகர்களில் மிகவும் தெளிவற்ற ஆனால் அழகன் கதாபாத்திரம் தான் பேரி லிண்டன்  , இதில் நடிகர் ரியான் ஓ'நீல் அற்புதமாக நடித்தார்.
பேரி கறைபடிந்த  நற்குணங்களை உடையவன்,  சந்தேகத்திற்கு இடமில்லாத படி  குருட்டு தைரியம், கலகத்தனம் நிரம்பியவன்.
பரந்துபட்ட சுயநலம்,ரத்தத்தில் ஊறிய கயமை, தன் ரத்த பந்தம் மகன் ப்ரெயன் மீது மட்டும்  அளவற்ற அன்பு கொண்டவன், திரைப்படத்தின் போக்கில், பேரி லிண்டன் தன்னை ஒரு தந்திரக்காரன், ஏமாற்றுபவன், ஒரு துரோகி மற்றும் ஒரு கொடுமைக்காரன் என்று அடுத்தடுத்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவன்.  
பேரி லிண்டன் படைப்பு வெற்றியின் சோகத்தை நுணுக்கமாகப் பேசுகிறது,பேரி லிண்டனின்  எழுச்சியே அவன் வீழ்ச்சி என்பதை நாம் இறுதியில் கண்ணுறுகிறோம்.

இயக்குனர்  கொப்போலா அவர்களின் "தி காட்பாதர் " மற்றும் மார்ட்டின் ஸ்கார்சேஸியின் ரேஜிங் புல் போன்றே பேரி லிண்டன் திரைப்படமும் ஒரு நாயகனின் எழுச்சி முதல் வீழ்ச்சி வரை அலசும் ஆழமான சித்தரிப்பாகும் .  

பேரி லிண்டனுக்கு சூரிய ஒளியில் தகதகக்கும்  சொகுசு கோட்டை , அலங்கார பிரம்மாண்ட ஏரி , ஓங்குதாங்கான தோட்டங்கள் மற்றும் ஆடம்பர ஓவியங்கள் நிறைந்த உட்புறங்கள் அழகிய சீமாட்டி மனைவி, நூற்றுக்கணக்கில் பணியாட்கள் என அதீதமாக தகுதிக்கு மீறி கிடைத்து விட்டாலும் மறுபுறம் அவனுக்குள் அதீத நிலையின்மை மற்றும் வெறுமையே குடிகொண்டுள்ளதை நாம் பார்க்கிறோம்.
 
நாயகன் பேரி லிண்டன் காலனித்துவ அயர்லாந்தில் பிறந்தவன், அங்கு இடம்பெயர்வு என்பது வாழ்க்கையின் அவசியமான விதி.  ஐரிஷ் நாட்டவனான நாயகன் இங்கிலாந்துக்கு சென்றதும் குப்பை கோபுரத்தை அடைந்ததைப் போன்ற எழுச்சியைப் பெறுகிறான்.

இயக்குனர் குப்ரிக் 1956 மற்றும் 1999 ஆண்டுகளுக்கு இடையில் அவர் வெறும் 11 படங்களை மட்டும் இயக்கி வெளியிட்டார்,அத்தனை தரமிகு படைப்புகள், 
இன்றும் ஒவ்வொன்றும் ஒருவித தலைசிறந்த படைப்பாக மிளிர்கிறது.  பேரி லிண்டன் மூன்று வருட காலம் படமாக்கப்பட்ட படைப்பு, ஒரு
 காலத்தை வென்று நிற்கும் படைப்பு, அதன் நுணுக்கமான சித்தரிப்புகள் கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது,  படம் பார்க்கும்போது, ​​நீங்கள் முழுமையாக சித்தரிக்கப்பட்ட உலகத்திற்குள் ஈர்க்கப்பட்டதை உணர முடியும், அப்படி உங்களை உள்ளே இழுத்து விடுகிற படைப்பு இது, இதற்கு இப்படைப்பு கோருவது உங்கள் முதல் ஐந்து நிமிட பொறுமையை மட்டுமே .  

இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது , இவ்விருதுகள் அனைத்தும் அத்தனை தகுதியானவை.  குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஜான் ஆல்காட்டின் ஒளிப்பதிவும், கென் ஆடமின் அரங்க வடிவமைப்புகளும் அத்தனை அபாரமானவை.  

முர்ரே மெல்வின், கே ஹாமில்டன், பேட்ரிக் மேகி, ஸ்டீவன் பெர்காஃப், ஃபிராங்க் மிடில்மாஸ் மற்றும்  லியோனார்ட் ரோசிட்டர் ஆகியோருடன் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் கதாபாத்திரங்களாக அத்தனை தத்ரூபமாக ஒளி,
ஒலியின் சமா சமமான விகிதத்தில் .
செல்லுலாய்டில் அரங்கேற்றிய உயிரோவியம் இது,இதில் வரும் உணவு மேஜைக் காட்சிகளில்  நாம் கற்க வேண்டிய நுணுக்கமான பாடம் உள்ளது,விதவிதமான ஒலிகளை அதன் நிஜத்தன்மையுடன் 4D தொலைநோக்கில் அந்த பிந்தைய 1960 களில் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் குப்ரிக்.

70 களின் முற்பகுதியில் இயக்குனர் குப்ரிக் இதற்கு முன் நமக்கு கொண்டாட ஒரு நல்ல வரலாற்றுத் திரைப்படம் இருந்திருக்குமா? என்று சந்தேகித்தவர் , தன் வாழ்நாள் சாதனையாக சாதித்துக் காட்டிய படம் தான் பேரி லிண்டன்.

எழுத்தாளர் William Makepeace Thackeray 1844 ஆம் ஆண்டு எழுதிய The Luck of Barry Lyndon என்ற புதினத்தை திரைக்கதையாக மாற்றிய இயக்குனர் குப்ரிக் ,
பேரி வாழ்க்கை பின்னணிக்கு தனக்கு மிகவும் பிடித்த குரலான மைக்கேல் ஹோர்டனை voice over பேச வைத்து மூன்று மணி நேர திரைப்படத்தை அத்தனை சுவையாக படத்தை நகர்த்திச் செல்கிறார் என்றால் மிகையில்லை.

இயக்குனர் குப்ரிக் ஆரம்பத்தில் வேனிட்டி ஃபேர் என்ற வரலாற்றுப் புதினத்தை படமாக்கவே விரும்பினார், ஆனால் அந்த நாவலின் நோக்கம் ஒரு திரைப்படத்தின் நீள ஓட்டத்துக்கு மிகப் பெரியது என்று முடிவு செய்தவர் அதனைக் கைவிட்டார். 

படத்தில் திருமணம் செய்துகொள்ளும் பேரியும் ,விதவை  செல்வ சீமாட்டி லேடி லிண்டனும் விளையாட்டு மேஜையில்  ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்தித்து தங்கள் முதல் முத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் இல்லாத நீண்ட காட்சி உலக சினிமாவில் மிக அழகிய ஒன்று, 
குப்ரிக் இதில் தொலைவில்  இருந்து அநேகம் நிகழ்வுகளை படம் முழுக்க சித்தரித்திருக்கிறார்.
ஏனைய காட்சிகளில்  மக்கள் அறைகளில் குழுவாக உள்ளதைக் காட்டுகிறார்,சிப்பாய்கள் போர் உருவாக்கத்தில் அணிவகுத்துச் செல்வது என எங்கு நோக்கிலும் குழுக்களை காட்டுகிறார், அதே போல பிரம்மாண்ட அரண்மனையின் ஆரவாரமற்ற பொழுதுகளையும் சரி சமமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் ஆசை மற்றும், ஆத்திரம் இவை திரைப்படத்துக்கு உயிர்ப்பூட்டி ஓட்டமெடுத்து உற்சாகமூட்டுகிறது, 
முதன்மையாக ஆயிரக்கணக்காக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில், பேரி லிண்டன் படப்பிடிப்பின் போது, ​​இந்த அற்புதமான காட்சிகள் விளைந்தன.  இந்த மெழுகுவர்த்திகள் வெளியிட்ட புகை காரணமாக படப்பிடிப்பு தளத்தில்  ஆக்ஸிஜன் பற்றாக்குறை உட்பட சில சிக்கல்களை உருவாக்கியது,அதைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

படத்தின் மையமாக சமச்சீராக ஒழுங்கமைக்கப்பட்ட சண்டையின் வன்முறை அழகியல் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  
satisfaction என்று சொல்லி இருவர் இட்டுக்கொள்ளும் minimilism பாணி துப்பாக்கிச் சண்டை பார்க்கவே அத்தனை விந்தையாக உள்ளது.
இந்த வகை gentleman agreement சண்டையை dual என்கின்றனர், இங்கு தமிழகத்தில் நேருக்கு நேர், ஒண்டிக்கு ஒண்டி கேரளத்தில் அங்கம் என்பர்.

அப்படி இரு பகைவர்களின்  gentleman agreement படி நடந்த dual  துப்பாக்கிச் சண்டையின் போது நிகழும் பேரியின் தந்தை மரணத்தில் தான் இப்படமே துவங்குகிறது.  
அதன் பின் நாகரீகமான நில ஆக்கிரமிப்புச் சடங்கு, கம்பீரமான போர் வீரர்களின் அணிவகுப்புடன் வரிசையுடன் திரையில் விரிகிறது.  

சீமாட்டி லேடி லிண்டன் தன் வயதான கணவனை புறம் தள்ளி பேரியை காதலிக்கும் அந்த திடீர் அதிர்ச்சியூட்டும் காட்சி கூட ஒரு வகையான சண்டை போலவே  கட்டமைக்கப்பட்டுள்ளது, 

பேரி லிண்டனும் லேடி லிண்டனும் ஒருவரையொருவர் பற்றிக் கொள்கின்றனர் மணவாழ்வை எதிர்கொள்கின்றனர், அவர்களுக்குள் love and hate வகை உறவு பூக்கிறது, ஆனாலும் ஒரு இடத்திலும் சீமாட்டி லேடி பேரியை விட்டுத் தருவதில்லை.

இத்திரைப்படம் ஒரு ஆழமான சமரசம் செய்து கொண்ட மனித வாழ்க்கையின் அவல சித்திரத்தை நமக்குக் கடத்துகிறது, சரித்திர படம் எடுப்பவர்கள் எப்படி தன் திரைப்படத்திற்கு ஒவ்வொரு துறைக்கும் thesis செய்து படத்தை துவங்கவேண்டும், முக்கியமாக மினசாரமில்லாத காலகட்டத்தின் ஒளி அமைப்பை எப்படி இயல்பாக உயிரோட்டமாக காட்சிப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை கற்க இப்படைப்பை பார்க்க வேண்டும், சினிமா ஆர்வலர்கள் மாணவர்கள் தவற விடக்கூடாத படம். Prime video ல் படம் உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)