மூலப்படைப்பை விட பல மடங்கு உயர்ந்து நிற்கும் தழுவல் எங்கேனும் கண்டதுண்டா? ஹாலிவுட்டின் இயக்குனர் ஆசான் Stanley Kubrick இயக்கத்தில் வந்த Spartacus படத்தில் அடிமைகள் சிறை தகர்க்கும் காட்சியில் இருந்து உந்துதல் பெற்று விருமாண்டி சிறை தகர்க்கும் காட்சியை வைத்தேன் என்று சமீபத்திய A walk down the memory lane பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்,
இப்படத்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்ததாகவும் குறிப்பிட்டார்,தமிழில் பல இயக்குனர்களுக்கு tribute வைக்கத் தெரியாது, ஒன்று ஈயடித்தான் காப்பி அடித்து overdose ஆக்கி விடுவர், இல்லை அக்காட்சியை spoof ஆக்கி நகைப்புக்குரியதாக மாற்றி விடுவர்.
ஸ்பார்டகஸ் படத்தில் நாயகன் Kirk Douglas மாவீரன் ஸ்பார்டகஸாக தோன்றும் காட்சியில் வெளிப்படாத சீற்றம் பிரம்மாண்டம் அனைத்தும் விருமாண்டியில் வெளிப்பட்டுள்ளது , தன்னை வீரன் விருமாண்டியாகவே மாற்றிக் கொண்டு அந்த அசுரபலம் திரட்டி அந்த ராட்சத இரும்புக் கதவை ராட்சத அடுப்பு கொண்டு தகர்க்கும் காட்சியைச் செய்துள்ளனர்.
நாம் அனைவரும் கோவில் தேரோட்டம் பார்த்திருப்போம் , அந்த தேர் வடத்தை முதல் சாரார் அசுர பலம் தந்து நரம்புகள் புடைக்க உள்ளங்கை காப்பு காய்த்து புண்ணாக ,பற்களை கடித்தபடி, மூச்சைப் பற்றிக் கொண்டு அந்த தேர் நகர வேண்டும் என்று இழுப்பர், இரண்டாம் சாரார் (பெரிய மனிதர்கள் )பாவனையாக தொட்டு இழுப்பர், மூன்றாம் சாரார் நடைபாதையில் இருந்து கைக்கூப்பி வணங்கி கண்ணாலேயே தேர் நகர்கையில் "பார்த்து" "பார்த்து" என பதறி வாயால் இழுப்பர் (கிரிக்கெட் கமெண்ட்ரி போல ) இங்கே இரும்புக் கதவு தகர்க்கையில் கமல்ஹாசன் நடிப்பு தேரிழுக்கும் முதல் சாரார் போல, Kirk Douglas நடிப்பு தேரிழுக்கும் இரண்டாம் சாரார் போலத் தோன்றுகிறது.
இதில் கேட்,கிராதிகள் அடுப்பு என அனைத்தும் பிரம்மாண்டம் தான், ஒளிப்பதிவு ,Shot Composition, editing அனைத்தும் பிரம்மாண்டம்.இங்கே Fb ல் ஸ்பார்டகஸ் படத்தின் சிறை தகர்க்கும் காணொளியை தரவேற்ற முடியவில்லை,படங்கள் ஏற்றியுள்ளேன், ஒரு அசல் ட்ரிப்யூட்டிற்கு classic example இது.
இந்த சிறை தகர்ப்பு காட்சிக்கு இசைஞானி தந்த பின்னணி இசை மற்றும் தீம் பாடல் மகத்துவமானது, அமரத்துவம் பொருந்தியது, காண்டாமணி என்றால் அங்கே காண்டாமணி தான் ஒலிக்கிறது, synthesizer மணி அல்ல.
வன்முறை என்பது எல்லா கைதிகளிடமும் ஆழ்மனதில் கனன்றபடியே இருக்கும், காரணம் அவர்கள் சமூகத்தால் போலீசாரால் வழக்கறிஞரால் நீதிபதியால் விருமனைப் போல வஞ்சிக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பாரகள், அரிய சந்தர்ப்பம் வாய்த்தால் அந்த தருணத்தில் தன் உள்ளம் புளங்காகிதமடையக்கூடிய காரியத்தை நிகழ்த்தவே பார்ப்பார்கள் , எனக்கு சிறை தகர்ப்பு காட்சி 1999 ஆம் ஆண்டில் சென்னை மத்திய சிறைச்சாலையில் பாக்ஸர் வடிவேலு என்ற கைதி மர்மமாக இறந்து விட,மறுநாள் நடந்த கைதிகள் கலவரம் போலீஸாரின் பதிலடியும் இப்படித்தான் இருந்திருக்கும் எனக் காட்டியது.
#ஸ்பார்டகஸ்,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#kirk_Douglas,#பிரம்மாண்டம்,#பிரபாகர்,#எடிட்டிங்
#விருமாண்டி,#கன்னியும்_காளையும்,#சொரிமுத்து,#டிவிஎஸ்_50,#ரயில்வே_க்ராஸிங்,#ரயில்வே_கேட்,#சின்னக்கோளார்பட்டி,#சிவாஜி_தோட்டம்,#சிவாஜி_கார்டன்,
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்