St.Thomas Garrison Church | செயிண்ட் தாமஸ் காரிஸன் சர்ச் 1830 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, 192 வருடங்களில் இதன் பொலிவு சற்றும் குறையவில்லை, இது செயின்ட் தாமஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது,இதன் அருகில் புகழ்பெற்ற சென்னை ராணுவ மருத்துவமனை ,officers training acadamy மைதானம் உள்ளது.
இந்த தேவாலயம் தென் மாவட்டங்களுக்கான தேவாலயங்களின் துவக்கப்புள்ளியாக அமைக்கப்பட்டது,
லண்டனில் உள்ள St Clement Danes தேவலாயத்தின் சாயலில் இத்தேவாலயம் எழுப்பப்பட்டது.
செயின்ட் தாமஸ் கேரிசன் தேவாலயம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள தேவாலயத்தின் தோற்றத்தையும் ஒத்து அமைந்துள்ளது.
இது 133 அடி (41 மீ) நீளமும் 66 அடி (20 மீ) அகலமும் கொண்டது. இந்த வளாகம் செங்கற்கள், காரை மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது,கடும் கோடைக் காலத்திலும் இந்த தேவாலயத்திற்குள் புழுக்கம் தெரியாது.
இந்த தேவாலயத்தின் வார்ப்பிரும்பு வேலிப்படல் மற்றும் தொழுகை நாற்காலி இருக்கைகள் திப்பு சுல்தானிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை உருக்கி அழித்து செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது, இன்று வரை இந்த வேலிப்படல் கிராதிகள் இரும்புக் கதவுகள் எதுவும் துரு பிடிக்காமல் இருக்கிறது, இணைப்புப் படம் காண்க.
இந்த தேவாலயத்திற்குள் doubting Thomas என்ற இயேசுவின் 12 சீடருள் ஒருவரான தாமஸ் இயேசுவின் மறுபிறவியை சந்தேகித்து தெளியும் ஓவியம் உண்டு, (இணைப்பு படம்)மற்ற தேவாலயங்கள் போல இயேசு சிலுவையில் அறைந்த சிலை இல்லை, மெதடிஸ்ட் படங்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. இயேசு கிறிஸ்து மற்றும் பிற அப்போஸ்தலர்களின் ஓவியங்கள் வழிபாட்டாளர்கள் எதிர்நோக்கும் சுவரை அலங்கரிக்கின்றன.
கருவறைக்கு பின்புறம் உள்ள அறையில் கோபுரத்தின் உச்சிக்கு செல்லும் மர படிக்கட்டு உள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய காந்த மணி மிகுந்த கனமானது , நூற்றாண்டுகளில் விரிசல்கள் கண்டதால் சமீபத்தில் ரங்கூனில் இறக்குமதி செய்த சிறிய மணி இங்கு மாற்றப்பட்டது.
இந்த தேவாலயத்தில் இருபது உயர்ந்த பர்மா தேக்கினால் செய்த ஜன்னல்கள், ஐந்து உயர்ந்த நிலைக்கதவுகள், ரோமானிய Ionic பாணிகிரீடம் வைத்த அழகிய தூண்கள், தேக்கு மரத்தால் செய்யப்பட்ட சிலுவை உள்ளது,
காரிஸன் என்பது ராணுவக் குழுவைக் குறிக்கும், பல்லாவரம் பகுதிக்கு veteran lanes ல் உள்ள St.Stephens தேவாலயம் உள்ளது போல பரங்கிமலைக்கு இந்த St.Thomas Garrison church விளங்குகிறது,
பரங்கிமலை கண்டோன்மெண்டைச் சுற்றி இருந்த பகுதிகளில் வசித்த பிரிட்டிஷ் இராணுவம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இந்த அழகிய தேவாலயத்திற்கு தாராளமான பங்களிப்புகளை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் வில்லியம் சிடன்ஹாமின் மார்பளவு வெண்பளிங்குச்சிலை தேவாலயத்தின் உள்ளே காணப்படுகிறது.
தேவாலயம் 1946 ஆம் ஆண்டு வரை நான்கு நிலை உயரமான கோபுரத்தைக் கொண்டிருந்தது,
1948 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் விமான நிலையம் திறக்க ஏதுவாக இந்த கோபுரம் இடித்து இரண்டடுக்கு கோபுரமாக மாற்றப்பட்டது, பழைய நான்கடுக்கு கோபுரத்தை இணைப்பில் உள்ள கருப்பு வெள்ளை படத்தை பாருங்கள்.
இந்த தேவாலத்தின் மேற்கு நுழைவாயிலில் நூற்றாண்டுகளாக நர்சரி பள்ளி இயங்கி வருகிறது, இந்த வளாகத்தில் உள்ள சீசா மற்றும் சறுக்கு மரத்தில் சிறுவயதில் சென்று விளையாடியது மறக்க முடியாது, இந்த தேவாலயத்தில் என் நண்பர்கள் வீட்டு திருமணங்கள் சில நடந்தது, இதன் உள் அலங்காரம் அத்தனை அழகிய ஒன்று, வாய்ப்பு கிடைப்பு கிடைக்கையில் இந்த தேவாலயத்துக்கு சென்று வாருங்கள்.
Ps: இது நான் கடந்து போகும் வரும் இடம், lost in translation எனக்கு ஏற்புடையதில்லை, நான் கதை வழியாக வரலாற்றை தேடுவதில்லை, புகைப்படங்கள் ஓவியங்கள் வழியே தேடுகிறேன், பகிர்கிறேன், எனக்கு வருணனைகள் உவமைகள் லயிப்பதில்லை, மனதில் ஒட்டுவதில்லை, காட்சிகளையே அசைபோடுகிறேன், .
#கேரிஸன்_சர்ச்,#செயிண்ட்_தாமஸ்_கேரிஸன்_சர்ச், #பரங்கிமலை