Once upon a time in hollywood (2019), திரைப்படத்தில் "The Green Hornet" தொலைக்காட்சி சீசன் படப்பிடிப்பு காட்சி உண்டு,1966-67 ABC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் இது , இதில் புருஸ்லீ kato என்ற கதாபாத்திரம் செய்கிறார், படப்பிடிப்பு இடைவேளையில் சக கலைஞர்களிடம் புருஸ்லீ இயல்பாக பேசுகையில் நேருக்குநேர் சண்டை என வந்துவிட்டால் நான் எதிராளியை கொன்றுவிடுவேன் என வாயை விடுகிறார், உடனே கூட்டத்தில் ஒருவர் , நீங்கள் Cassius Clay (முகமது அலி) உடன் மோதினால் ?
அது தான் நடக்காதே? ,
ஒருவேளை நடந்தால்?
நான் Cassius Clay வை முடமாக்கிவிடுவேன் , என்கிறார் புரூஸ்லீ.
உடனே அங்கே ஆள் கூட்டத்தில் நடிகர் ரிக் டால்டன் போன்றே அழகிய costume அணிந்து அமைதியாக அமர்ந்திருந்த stunt double Cliff booth களுக்கென சிரிக்கிறார்.
புரூஸ்லீ , யார் நீ ? நீ ஏன் சிரித்தாய்? என வாயைக் கிண்டுகிறார்,
நான் Cliff , ரிக் டால்டனின் stunt double என்கிறார்.
உன்னைப் பார்த்தால் ஸ்டண்ட் மேன் போல தெரியவில்லையே,நீ வசீகரத் தோற்றம் கொண்டுள்ளாயே? என்கிறார் ப்ரூஸ்லீ.
ஆமாம் அப்படித் தான் எல்லோரும் சொல்கின்றனர் என்கிறார் cliff booth.
சரி நான் சொன்னதற்கு ஏன் சிரித்தாய் ?
நான் நினைப்பது என்ன என்றால்,
நீ பேசிய இந்த பேச்சிற்கு உன்னை வெட்கி தலைகுனிய வைக்கலாம் தவறில்லை,
பெரிய வாயும் ,பெரிய சவடாலும் கொண்ட சிறிய மனிதன் நீ,
Cassius Clay வை முடமாக்க உன் போன்ற நடனக்கலைஞர்களால் முடியவே முடியாது,
Cassius Clay அணிந்திருக்கும் உள்ளாடையில் துடைக்காத கறை மிச்சம் இருக்குமானால் , அதற்கு ஈடாகமாட்டாய் நீ, என்கிறார் cliff booth.
என்றால் வா ,ஒற்றைக்கொற்றை மோதிப்பார்க்கலாம் என சண்டைக்கு அழைக்கிறார் புருஸ்லீ,எனக்கு உள்ள பிரச்சனை போதும், எந்த புதிய பிரச்சனையிலும் நான் இல்லை என்கிறார் cliff booth,
தொடைதட்டி அழைக்காத குறையாக கைகலப்பு வேண்டாம், நட்புரீதியான மோதல் செய்வோம் வா என அழைக்கிறார் ப்ரூஸ்லீ, முகத்தில் தாக்காமல் யார் மூன்று முறை எதிராளியை கீழே விழவைக்கிறாரோ அவர் ஜெயித்தவர் என்கிறார்,
cliff booth தன் டோப்பாவை கழற்றி கார் ஆன்டனாவில் மாட்டியவர்,blazer ஐ ஒயிலாக கழற்றிவிட்டு தயாராக நிற்கிறார், புருஸ்லீ காதில் அவர் உதவியாளர் கூலர்ஸ் மற்றும் சட்டையை கையில் வாங்குகையில் இவர் புகழ்பெற்ற மனிதன், கவனம் எனச் சொல்ல,எதற்கு புகழ்பெற்றவர் என புரூஸ் லீ கேட்க? தன் மனைவியை கொன்று தப்பியதில் என்று பதிலுரைக்கிறார் உதவியாளர்,
தன் வழமையான அகவல் சப்தம் இட்டு, cliff booth மார்பின் மீது காலில் உதைத்துப் பாய்ந்து தரையில் தள்ளுகிறார்.
Cliff booth உடனே எழுந்தவர், சரியான பாடம் புகட்ட எண்ணி,மீண்டும் முயற்சி செய் என ஊக்கம் தர, இன்னும் ஆக்ரோஷமாக வழமையான அகவலுடன் பக்கவாட்டில் பாய, cliff booth விலக, புரூஸ் லீ அடுத்து நின்ற நீல வண்ண muscle car மீது பறந்து போய் விழுந்து கடுமையாக அடிபட்டுக்கொண்டவர், துடைத்து எழுகிறார்,
இப்போது இருவருக்கும் கைகலப்பு, ஒருவரை ஒருவர் tag செய்து கிடுக்கிப்பிடி போட்டு தட்டி தாக்கி வீழ்த்த முயல்கின்றனர்,
என்ன சப்தம் எனக் கேட்டு வந்த இயக்குனரின் மனைவி Janet, இந்த கைகலப்பின் மூன்றாம் தவணையை தடுத்து அங்கே draw ல் முடியவைக்கிறார்,
cliff booth ற்கு தன் ஆட்சேபனையையும் மீறி இந்த stunt man double வேலை தந்தமைக்காக தன் இயக்குனர் கணவர் randy ஐ கடிந்து கொண்டவள், தன் கார் கதவுகள் இப்படி நசுங்கி சேதமாகியதைப் பார்த்து cliff booth ஐ உடனே தளத்தில் இருந்து வெளியேறச் சொல்லி கத்துகிறாள்.
இந்த stunt double வாய்ப்பை நடிகர் ரிக் டால்டன் தன் நண்பன் cliff booth ற்கு இயக்குனர் randy ஐ சமாதானம் செய்து அத்தனை பாடுபட்டு வாங்கித் தந்திருப்பார், இவனை அந்தரத்தில் இருந்து குதிக்கச் சொல்லுங்கள் குதிப்பான்,கொளுத்தி விடுங்கள் அப்படி எரிவான், எந்த பிரச்சனைக்கும் போகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி சேர்த்து costume ஐ மாட்டி அமர்த்தியிருப்பார், அது இப்படி குரங்காக முடிந்திருக்கும்,
இப்போது முதல்நாள் பலத்த காற்றடித்து முறிந்து விழுந்த தன் தொலைக்காட்சி ஆன்டனாவை சரி செய்ய தன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார் நடிகர் ரிக் டால்டன்,வீட்டுக்குப் போய் கூரையேறும் அந்த சிறிய காட்சி அத்தனை அழகாக இருக்கும்,tools room சென்று gloves எடுத்து, இடுப்பில் தனித்துவமான இரண்டு பியர் கேன் வைக்கக்கூடிய தடித்த தோலால் செய்த belt அணிந்து குரங்கு போல இரண்டு தாவு தாவி கூரை அடைந்து சட்டையை கழற்றுவார், அண்டை வீட்டில் வசிக்கும் நடிகை sharon tate ரெகார்ட் மாற்றி பாடலை ஒலிக்க விட்டதை ரசித்தபடியே சிகரெட்டை பற்றவைத்து இழுப்பார் cliff booth ,
ப்ரூஸ்லீ வரும் இக்காட்சிகள் எதுவும் கோர்வையாக வராமல் cliff booth அழகாக கூரையேறி ஆன்டனா சரிசெய்கையில் நினைத்துப் பார்க்கையில் தான் காட்சியாக விரியும்.
மேலும்
Once upon a time in hollywood