படத்தில் இருப்பவர் மோகன் கோகலே ஹேராம் படத்தில் ஸ்ரீராம் அப்யங்கர் கதாபாத்திரத்தில் 90% நடித்தவர், மீதம் ஒரு வாரம் மட்டுமே இவரது காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில் இவர் தங்கியிருந்த park Sheraton ஓட்டலில் ஏப்ரல் 29 1997 ஆம் ஆண்டு இரவு தூங்குகையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார், அப்போது இவருக்கு வயது 45 , இவர் தலைசிறந்த மராத்திய நாடகம் மற்றும் பேரலல் சினிமா நடிகர்,
நீங்கள் மும்முரமாக கணினியில் வேலை செய்கையில் மின்சாரம் போய்விட, நீங்கள் செய்த மிகச்சிறந்த ரசனையான வேலை போய்விடுகிறது, நீங்கள் அதை திரும்ப முதலில் இருந்து செய்யவேண்டும் என்றால் உங்கள் மனம் எத்தனை அயற்சியடையும்? அதை நீங்கள் அதே பழைய உந்துதலுடன் செய்வீர்களா?
அப்யங்கர் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம், படத்தில் கமல்ஹாசன், பரோடா மகாராஜா விக்ரம் கோகலே,வசுந்தராதாஸ்,சௌரப்ஷுக்லா மற்றும் பல நடிகர்களுடன் அவருக்கு 40 % combination shots இருக்கும், 40% கமல்ஹாசனுடன் shots ,10% க்ளோசப்ஷாட்ஸ் என வையுங்கள்,
திடீரென இந்த முக்கிய நடிகர் இறந்துவிடுகிறார்,தமிழ் சினிமாவில் வேறு எந்த தயாரிப்பாளர்?,அல்லது இயக்குனர் இந்த சூழலில் என்ன செய்வார்கள்?
டூப் வைத்து 10% காட்சியை மேக்அப் செய்வார்கள், அல்லது அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை வெட்டுவார்கள், சுருக்குவார்கள், ஆனால் இயக்குனர் கமல் சூட்டோடு சூடாக மற்றோரு மராத்தி நாடக ,சினிமா நடிகரை அதே தோற்றம், அதே ஓநாயின் வஞ்சம் கொண்ட சக்தி பொருந்திய கண்களுடன் தேர்வு செய்து மீண்டும் இவரை வைத்து இயக்கி எடுத்த காட்சிகளை திரும்ப எடுத்து பகீரத பிரயத்தனப்பட்டுள்ளார்,
இந்த உழைப்புக்கு பலன் கைமேல் கிடைத்தது, அதுல் குல்கர்னிக்கு Best Supporting Actor கான தேசிய விருதும்,ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது, அப்யங்கர் என்றால் அதுல் குல்கர்னி,அதுல் குல்கர்னி என்றால் அப்யங்கர் என ஆகிப்போனது.
PS: மோகன் கோகலே பற்றி கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது அப்படியே இங்கே.
Q: Coming back to 'Hey!Ram' any really touching incidents while shooting for the film?
A: There are three such incidents. The recreation of the violence of the Calcutta carnage and the assasination of Gandhi. I really felt bad and so touched that I even wept, moving away from the shooting spot.
The third is the death of dear friend Mohan Gokhale during the film's shoot. By then he had had a massive heart attack and offers weren't forthcoming his way. I took him on the project just to prove to the world what an actor of capability he is. Had he lived for two more months, the world would have seen what a great actor he is. Now the role is played by his friend Atul Kulkarni
#அதுல்குல்கர்னி, #ஹேராம், #கமல்ஹாசன்,#மோகன்கோகலே,#reshoot,#மறுபடப்பிடிப்பு,#நச்சுவேலை,#அப்யங்கர்