P.Padmarajan | பி.பத்மராஜன்
(23 May 1945 – 24 January 1991)
பத்மராஜனின் கதைகள் முக்கியமாக வஞ்சம், கொலை, காதல், மர்மம், பேரார்வம், பொறாமை, சுதந்திரவாதம், அராஜகம், தனித்துவம், சமூக அமைப்பு, மனித உளவியல் மற்றும் சமூகத்தின் புற கூறுகளின் வாழ்க்கை ஆகியவற்றை தீர்க்கமாகப் பேசுகின்றன.
அவர் படைப்புகள் சில மலையாள இலக்கியத்தில் சிறந்தவையாக கருதப்படுகின்றன.
அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் பத்மராஜனே திரைக்கதை எழுதியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது முதல் நாவல் நக்ஷத்திரங்களே காவல் புதினம் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றது (1972).[6]
பாலுமகேந்திராவின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவில் பரதன் இயக்குனராக அறிமுகமான பிரயாணம் (1975) திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி மலையாள சினிமா உலகில் நுழைந்தார் பப்பேட்டா என்ற பத்மராஜன்.
ராப்பாடிகளுடே கதா (1978) திரைக்கதை எழுத்தாளராக அவரது மூன்றாவது திரைப்படமாகும்,
இது 1978 ஆம் ஆண்டில் சிறந்த கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது.
திரைக்கதை எழுத்தாளராக அவரது அடுத்த படைப்பு erotic கிளாசிக் திரைப்படமான ரதிநிர்வேதம் (1978) , இது இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு cult classic அடையாளமாகவே கருதப்படுகிறது.
மேலும் மூன்று படங்களுக்கு திரைக்கதை எழுதிய பிறகு, பத்மராஜன் 1979 ஆம் ஆண்டில் பெருவழியம்பலம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
பெருவழியம்பலம் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது , IBN லைவ் இன் எல்லா காலத்திலும் 100 சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டில் ஓரிடத்தொரு பயல்வான் திரைப்படத்தை அடுத்ததாக இயக்கினார். பத்மராஜன் இந்தப் படத்தின் எடிட்டிங்கையும் தானே செய்தார். கோலாலம்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும், ஆசிய திரைப்பட விழாவில் தங்கப் பதக்கத்தையும் ஓரிடத்தொரு பயல்வான் திரைப்படம் வென்றது.
1982 இல் அவர் இயக்கிய நவம்பரிண்டெ நஷ்டம் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது, கிராமிய சூழலில் அண்ணன் தங்கை பாசத்தை எத்தனையோ படங்களில் பார்த்திருப்போம், இதில் நகரிய சூழலில் பாசம் மிகுந்த அண்ணனாக ராமசந்திரன், தங்கை மாதவி , அண்ணியாக சுரேகா, காதல் ஆசை காட்டி கைவிடும் லட்சியம் மிகுந்த கல்லூரி சீனியர் பிரதாப் போத்தனால் மனப்பிசகிற்கு ஆளாகிறார் தங்கை மாதவி.மூன்று வருடத்தில் பிரதாப் போத்தன் நகரில் பெயரெடுத்த ஹிப்னாடிஸ்ட் ஆகிறார்,தங்கை மாதவி மனநோயால் அழுந்தப்படுகிறார், அண்ணன் அண்ணி அவளைக் கைவிடுவதில்லை, பிரதாப் போத்தனால் மீண்டும் தங்கைக்கு மனப்பிழற்வு துவங்க அண்ணன் எடுக்கும் முடிவு அதற்கு பிரதிபலனாக தங்கை எடுக்கும் முடிவு என அற்புதமான படைப்பு இது.
பத்மராஜனின் கூடெவிடே? (1983) பிரபலமான முறையீடு மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது.
1984 ஆம் ஆண்டில், சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்ற ஐ.வி.சசியின் கணமறையத்து திரைப்படத்திற்கு அவர் திரைக்கதை எழுதினார்.
1986 ஆம் ஆண்டில் அவர் தேஷாடனக்கிளி கரையாரில்லா திரைப்படத்தை இயக்கினார், இது திரையில் பெண் உள்ளத்தை ஆராய்ந்த முதல் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகும்.
1985 ஆம் ஆண்டு திங்களாழ்சே நல்ல திவசம் மூலம் இரண்டாவது தேசிய விருதை வென்றார்.
பத்மராஜனின் கரியிலக்காட்டு போலே (1986) மலையாளத்தின் உன்னதமான புலனாய்வு திரில்லர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அதே 1986 ஆம் ஆண்டு அவர் இயக்கிய அரப்பெட்டா கெட்டிய கிராமத்தில் திரைப்படம் வெளியானது,இன்றும் இது கல்ட் அந்தஸ்தை தக்க வைத்திருக்கும் படமாக விளங்குகிறது, ஒரு விபச்சார விடுதி மற்றும் அதன் தலைவி, அதில் உள்ள பாலியல் தொழிலாளிகள் அங்கு சுகிக்கச் செல்லும் மூன்று நண்பர்கள் ,முரட்டு ஊரார் இவர்களைச் சுற்றி நடக்கும் இத்திரைப்படத்தின் கதையானது இன்றும் கூட புதுமையானது.
நடிகர் மோகன்லால் முக்கிய பாத்திரத்தில் நடித்த நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் (1986) தூவானத்தும்பிகள் (1987) மற்றும் சீசன் (1989) போன்ற சில உன்னதமான திரைப்படங்களை கலாசிருஷ்டியாக இயக்கினார் பப்பேட்டா.
தூவானத்தும்பிகள் ஐபிஎன் லைவ் அதன் எல்லா காலத்திலும் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் மலையாளத்தில் இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அபரன் (1988) பப்பேட்டாவின் உன்னதமான மர்ம உளவியல் த்ரில்லர் , இதில் ஜெயராம் இரட்டை வேடத்தில் அறிமுகமானார்.இது 1988 ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது.
மூனாம்பக்கம் (1988) விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்ட பப்பேட்டாவின் திரைப்படமாகும்.
இந்நலே 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், முக்கியமாக சுரேஷ் கோபியின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது.
பத்மராஜனின் கடைசித் திரைப்படம் ஞான் கந்தர்வன் (1991) ஆண்டு வெளியானது , அதன் அழகியல் மற்றும் கதைசொல்லல் காரணமாக இப்படம் பின்னர் ஒரு கல்ட் அந்தஸ்தை உருவாக்கியுள்ளது.
இப்படம் வெளியான ஒரே வாரத்தில், இயக்குனர் பத்மராஜன் கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து இறந்தார்.
பத்மராஜன் தான் இயக்கிய 18 படங்களில் 37 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மலையாள சினிமாவில் மாபெரும் படைப்பாளி, இவர் படைப்புகள் பற்றி எத்தனை பேர் எழுதினாலும் முழுதும் சொல்லி விட முடியாது,அத்தனை விஷயம் மீதமிருக்கும்.
பப்பேட்டா படைப்புகளை ஒருமுறை பார்ப்பதோடு நிறுத்தியதில்லை, எதோ பெயரெடுத்த எடிட்டர் ஒரு படத்தை ஓட்டி ஓட்டி பார்ப்பது போலவே பார்ப்பேன், எப்போதும் அதில் எதாவது ஆச்சர்யம் மீதமிருக்கும், அவர் படைப்புகள் பற்றி முன்பு ஆற அமர அசைபோட்டு எழுதியவை இவை.
இதா இவிட வரெ (திரைக்கதை)
பெருவழியம்பலம்
கள்ளன் பவித்ரன் 1
கள்ளன் பவித்ரன் 2
ஒரிடத்தொரு பயல்வான்
நவம்பரிண்டெ நஷ்டம்
நமுக்கு பார்க்கான் முந்திரிதோப்புகள் 1
நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 2
நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 3
நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் 4
தூவானத்தும்பிகள் 1
தூவானத்தும்பிகள் 2
தூவானத்தும்பிகள் 3
மூணாம்பக்கம் 1
மூணாம்பக்கம் 2
மூணாம்பக்கம் 3
மூணாம்பக்கம் 4
மூணாம்பக்கம் 5
மூணாம்பக்கம் 6
திங்களாழ்ச்சே நல்ல திவசம்
தேஷாடனக்கிளி கரையாரில்லா
இந்நலே
கொச்சு கொச்சு தெற்றுகள் (திரைக்கதை)
லோரி (திரைக்கதை)
கரிம்பின்பூவின்அக்கரே
சாவித்திரி தமிழ் (திரைக்கதை)
#பப்பேட்டா,#பி_பத்மராஜன்