நேற்று காலை தாம்பரம் மாநகராட்சியில் இருந்து ஒரு பில் கலெக்டர் வீட்டுக்கு வந்து வீட்டு வரி நிலுவைத்தொகையை வாங்கிச் சென்றார், எப்போதும் ஆன்லைனில் ஊருக்கு முன்பாக சரியாக செலுத்திவிடுவார் மனைவி,
இம்முறை பம்மல் நகராட்சியை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பதால் இணையதளம் திறக்கவில்லை,error காட்டியது, நேற்று பில் கலெக்டரே நேரில் வந்தது மிகவும் அதிசயமானது,
இந்த 23 ஆண்டுகளில் மாநகராட்சி பில் கலெக்டர் நேரில் வீட்டுக்கு வந்தது இதுவே முதல்முறை, இடுப்பில் வாக்கிடாக்கி வைத்திருந்தார், GPS camera app ல் வரி நேரில் சென்று வசூலிப்பதை படமெடுக்க வேண்டும் என்பது சுற்றறிக்கை ஆணை என தயங்கியபடி கேட்டார்,
படம் எடுத்துக் கொண்டோம்,
408 ₹ வரி , 700 சதுரடி இரண்டு படுக்கை அறை அடுக்கக வீடு இது, 23 வருடப் பழமை, ஒரு ஆண்டுக்கு இக்கட்டணம் மிக நியாயமானது (2022-23) ,இன்று வந்து இந்த வரி ரசீதை தந்துச் சென்றார் பில் கலெக்டர்.
அரசின் இந்த வீடு தேடி வரிவசூல் நல்ல நடவடிக்கை.