இனி வீட்டு மனை, அடுக்ககம் வாங்கும் முன் காற்றுத் தரம் சோதிப்பது அவசியமாகும், காரணம் காற்று மாசு இன்று ஒவ்வோரு குடும்பத்திலும் சொல்லொனாத் துயரைத் தருகிறது,வீட்டுக்கு ஒருவர் ஆஸ்துமா, இதய நோய்,மற்றும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுவதைப் பார்க்க முடிகிறது.
இப்போது பெருநகரில் , புறநகரில் மனை , வீடு வாங்குபவர்களுக்கு Google Map ஒரு புதிய சிறப்பம்சத்தை அறியத் தருகிறது,நாம் மனை அல்லது அடுக்ககம் வாங்க இருக்கும் பகுதியில் காற்றின் தரத்தை இந்த அம்சம் மூலம் எளிதாக அறிய முடியும்.
Google map சென்று அம்புக்குறி இட்ட icon ஐ அழுத்த இப்படி ஒரு window திறக்கும், அதில் air quality அழுத்த அதற்கான air quality Map திறக்கும்.
பம்மலுக்கு இன்னும் வரவில்லை என்றாலும் தாம்பரம் துவங்கி ஆலந்தூரில் இருந்து 10 கிமீ சுற்றளவிற்குள் வசிக்கும் எனக்கு காற்றின் தரம் 143% ஆகும்,இதற்கு பலன்கள் பாருங்கள்.
Breathing discomfort to people with asthma, or lung and heart diseases.
ஆஸ்துமா, அல்லது நுரையீரல் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு சிரமான வசிப்பு சூழல் தரும் அளவீடு இது.
எங்கள் வீட்டில் யாருக்கும் இந்த குறைபாடு இல்லை, ஆனால் இந்த சரகத்தில் வீடு வாங்க நினைப்பவர்கள் அவருக்கோ அவரது வீட்டார் யாருக்கோ இந்த குறைபாடுகள் இருந்தால் இங்கே வீடு வாங்காமல் தவிர்ப்பது புத்திசாலித்தனம்,
இப்படி இந்த feature உபயோகித்து மனை,அடுக்ககம் தேடுவது உங்கள் பெரு முதலீட்டுக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.
உதாரணத்துக்கு இங்கே அடையார் ஆறு நீர்நிலை ஒட்டிய பகுதிகள் அத்தனை அசுத்தமானவை,தினமும் நாங்கள் கெருகம்பாக்கம் ஆஞ்சனேயர் கோயில் சென்று வர கவுல்பஜார் வழியே அடையார் ஆற்றைக் கடக்கையில் தினம் கண்ணுறுவது நகரின் குப்பைகளை இங்கே கொட்டி எரிக்கிற அவலம்,
சுமார் ஒரு கோடி ரூபாய் பெருமுதலீட்டில் வீடு வாங்குபவர்கள் அந்த பகுதியில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் என்ன நிகழ்கிறது , கழிவுநீர் சாக்கடை வெளியேற்றம், குப்பைகள், வெளியேற்றம் எப்படி நிகழ்கிறது என ஆராய்ந்து அறியுங்கள்.
சென்னை மக்கள் பெருக்கம் பூதாகரமாகப் பெருகி வருகிறது, சிறிய தனியார் க்ளீனிக்கில் கூட காலை ஏழு மணிக்கு குழந்தைகள், நடுத்தர வயது பெண்கள், மூத்த குடிமக்கள் என சுமார் ஐம்பது பேர் மருத்துவரை பார்க்க காத்திருப்பதை தினம் பார்ப்பதால் இதை எழுதுகிறேன்.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com