விருமாண்டிக்கு 12 வயதிருக்கையில் தாய் இறந்து விடுகிறார், தந்தை புலியேறு படியான் சின்னக்கோளார் பட்டி ஊரில் வஸ்தாது நல்லம நாயகரின் உற்றத் தோழர் , அவருடன் கொத்தாள தேவரின் தந்தை தவசிதேவருடன் தனக்கிருந்த விரோதத்திற்கு பஞ்சாயம் செய்யப் போய் தவசி தேவர் அரிவாள் தூக்க நண்பன் உயிர் காக்கவும் தன் தற்காப்புக்கும் நல்லம நாயக்கர் அவரை வெட்டி விட்டு 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்று சிறை சென்று சிறை மீண்டுள்ளார்,
தன்னை பஞ்சாயத்துக்கு கூட்டிப் போன புலியேறு படியான் தேவரை நல்லம நாயக்கர் கோர்ட்டில் காட்டித் தராததால் அவர் அன்று சிறை செல்லவில்லை, அவர் மகனைக் கூட்டிக் கொண்டு சிங்கப்பூர் சென்று ஜீவனம் செய்து வசிக்கிறார், வருடங்கள் செல்ல மூப்பினால் ஊருக்குத் திரும்பியவர் மரணிக்க அவரை நல்ல நீர் ஏரிக்கு அடுத்த முதல் வயலில் புதைத்துள்ளனர்.
இந்தப் புகைப்படம் சண்டியரே சண்டியரே பாடலில் வருகிறது, மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் படத்தில் வசனங்கள் ஊடாக வருகிறது.
சிங்கப்பூரில் தந்தை மறைவுக்குப் பின்னர் மீண்டும் சென்று இருந்த விருமாண்டி அவரின் சித்தி காந்திமதியின் மகன் செய்த தவறை தான் செய்ததாக பழியை ஏற்று சவுக்கடி தண்டனை பெற்று சின்னக்கோளார் பட்டி ஊருக்கு நிரந்தரமாக திரும்பி தன் அப்பத்தா s.n.லட்சுமியுடன் வசிக்கிறார், அப்பத்தா ஊரில் தனித்து இயற்கை விவசாயம் செய்த மனிஷி,மிகுந்த கண்டிப்பானவர்,ஆனால் தன் கணவரின் நடை உடை பாவனையுடன் விளங்கும் பேரன் மீது பாசம் மிகுந்தவர்.
விருமாண்டி வங்கியில் பத்து லட்சம் ரூபாய்க்கு வைப்பு நிதி வைத்து வருகிற வட்டி வாங்கி ஜீவிக்கிறார், குபீர் ஜாலி சகோதரர்களுடன் கொட்டம் அடித்து மகிழ்கிறார், தன் வம்பு தும்புகளுக்கு அவர்களை பயன்படுத்துவதில்லை, சம்மந்தப்படுத்துவதில்லை.
#விருமாண்டி,#கொத்தாளத்_தேவர்,#தவசி_தேவர்,#நல்லம_நாயகர்,#புலியேறு_படியான்,#அன்னலட்சுமி,#காந்திமதி,#சிங்கப்பூர்_மச்சான்
#விருமாண்டி,#கன்னியும்_காளையும்,#சொரிமுத்து,#டிவிஎஸ்_50,#ரயில்வே_க்ராஸிங்,#ரயில்வே_கேட்,#சின்னக்கோளார்பட்டி,#சிவாஜி_தோட்டம்,#சிவாஜி_கார்டன்,
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்