நம்மில் இந்த 2K கிட்ஸ் தவிர அநேகம் பேருக்கு இந்த broadcasting signal test card பசுமையாக நினைவிருக்கும் , இந்தியாவில் இருக்கும் டிவி ஸ்டேஷன்களில் காட்டிய ஒளிபரப்பு PAL (Phase Alternating Line ) வகையைச் சேர்ந்தது, அமெரிக்காவில் டிவி ஸ்டேஷனில் காட்டிய ஒளிபரப்பு NTSC (National Television System Committee ) வகையைச் சேர்ந்தது,இது பெரிய topic, விருப்பமுள்ளவர்கள் தேடிப் படியுங்கள்.
முன்பு DD தூர்தர்ஷன் காலத்தில் ஒற்றைச் சேனல் இருக்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு மிகுந்த மரியாதை இருந்தது, அதில் தொலைக்காட்சி நிலையத்தில் தயாரான அரங்க நாடகம் ஒளிபரப்பினாலும் அப்படி பார்ப்போம் , அப்போது மக்கள் ஒளிபரப்பு துவங்கும் முன்னர் வரும் இந்த test card ஐயே பார்த்தபடி , கொய்ங் என்ற சப்தத்தை கேட்டபடி ஒளிபரப்பு துவங்குவதற்கு தேவுடு காத்திருப்பார்கள்,
அப்போது இந்தியாவில் அநேகம் பேர் வீடுகளில் கருப்பு வெள்ளை டிவி தான் இருந்தது ஆதலால் இந்த PAL test card ஐ நாம் monochrome அதாவது விதவிதமான பழுப்பு நிறங்களில் தான் பார்த்திருப்போம்.
நம் சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு என்று இந்த Philips PM5544 test card ல் இருந்து
பிரத்யேகமாக சற்று மாற்றி வடிவமைக்கப்பட்ட ஒரு test card வழக்கத்தில் வைத்திருந்தனர், இது அழகன் திரைபடத்தில் சங்கீத ஸ்வரங்கள் பாடலில் வரும்,இந்த test card ல் இருக்கும் colour palette ஐ மனதில் பதித்து ஆடை உடுத்தினால் photorealistic ஆக அந்த ஒளிப்பதிவு இருக்கும்.
பொதுவாக Handicam, Camcorder ல் பதியும் ஒளிப்பதிவுகள் NTSC வகையைச் சேர்ந்தது,இதை விருமாண்டி திரைப்படத்தின் title ல் காணலாம், இந்த வித விதமான நிறங்கள் கொண்ட test card ன் pixelsமீது தான் கலைஞர்களின் பெயர்கள் சுழன்று தோன்றி மறையும்,
இந்த கொய்ங் என்ற ஓசையை கச்சிதமாகத் தொடர்ந்து இசைஞானி ஆ என்று கோரஸ் ஒலிக்க வைத்து மெல்ல தடதடக்கத் துவங்கி வீர்யம் கொள்ளும் ஒரு அபாரமான பின்னணி இசையை இந்த survival திரைப்படத்தில் முத்தாய்ப்பாக சேர்த்திருப்பார்.
பின்னாளில் Apocalypto என்ற survival திரைப்படத்தில் அதே போன்ற ஒரு original score பின்னணி இசையை James Horner செய்திருந்தார், அதை தியேட்டரில் பார்த்ததும் dejavu போல விருமாண்டி இசை நினைவுக்கு வர நான் மலைத்துப் போயிருக்கிறேன், நம் இசைஞானி புகுத்தாத பாணி, செய்யாத சாதனை பாக்கி இல்லை.
பெயர் ஓடி முடிந்தவுடன் நீதியரசர் கிருஷ்ணையர் மீது camcorder lens திறந்து focus ஆகும், அவர் மரண தண்டனை பற்றி பேசத் துவங்குவார், எத்தனை டீடெய்லான ஒரு ஆக்கம் அது என வியந்திருக்கிறேன், இன்றைய திரைப்பட மாணவர்கள் உதவி இயக்குனர்கள் இக்காட்சியைப் பாருங்கள் பல கதவுகள் திறக்கும்.
#test_card,#pal,#ntsc,#Finn_Hendil,#Philips_PM5544,#விருமாண்டி,#இசைஞானி,#ஜேம்ஸ்_ஹார்னர்,#கமல்ஹாசன்,