ஆசை வெட்கம் அறியாது,இன்றைய அரசியல்வாதிகளின் புகழ்,அவர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் பணக்காரர்கள் செலவு செய்த விளம்பர பேக்கேஜ் முடிவுக்கு வரும் வரை மட்டுமே இருக்கும், அதன் பின்புகழ் மங்கி காலாவதியாகிவிடும்.
புன்னகை மன்னன் படத்தில் ரேவதி கார் கண்ணாடியின் தூசியில் சிங்களத்தில் ஏதோ எழுதுவார்,கமல் அவரிடம் ஆர்வம் கலந்த கண்டிப்புடன்
எம் பேர் எழுதியிருக்க?!!!
அவர் மறுக்க
பின்ன உம்பேரா?!!!
அவர் மீண்டும் மறுக்க
என்ன தான் எழுதிருக்க?
மாருதி, என்று அவர் பயந்தபடி சொல்ல
அது யார் பேரு?என்று பொறாமை கலந்த கோபத்தால் கமல் கேட்க
ரேவதி: காரோட பேரு
கமல் உள்ளூர மகிழ்ந்தவர்
வெளக்கெண்ண முண்டம் இத கிறுக்கிக்கிட்டிருக்கற நேரத்துல உள்ள கொஞ்சம் டான்ஸ் கத்துக்கலாம்ல?
அப்புறம் ரோடுல போய் ரோடுன்னு எழுதுவியா?சிங்களத்துல,
பைத்யக்காரி,பைத்யக்காரி என்பார்.
யாரோ இரண்டரை லட்சம் செலவு செய்து இந்த சூட்டை இவருக்குப் பரிசளித்தாலும்? இதை எப்படி லஜ்ஜையின்றி அணிந்து வலம் வந்தார்?
நிறைய பணம் கொடுத்து இலவசமாக இது போல என் பெயரை பொரித்து யாரேனும் சூட் தைத்து என்னை அணியச் சொன்னால் நானே அணிய மாட்டேன், அசிங்கம் பார்ப்பேன்,
இதைத் தான் ஆசை வெட்கம் அறியாது என்பார்கள் போல
புன்னகை மன்னன் படத்தின் மிக அருமையான அந்த காதல் அரும்பும் காட்சி,இன்று பார்க்கையிலும் எத்தனை இளமை?எத்தனை புதுமை அதை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=K6gC1frSeJU