1962 ஆம் ஆண்டில் மெட்ராஸில் இருந்து மாமல்லபுரம் , பாண்டிச்சேரி செல்வதற்கு TVS போக்குவரத்து நிறுவனத்தார் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் பேருந்து இது,
இங்கிலாந்தில் தயாரான Bedford நிறுவனம் தயாரித்த பேருந்தாகும், அழகாக புதையும் high back leaning நாற்காலிகளுடன், பக்கவாட்டில் திறக்கும் sliding door உடன் இயங்கி வந்துள்ளது, ஓட்டுனர் முன்னால் இருக்கும் wind shield கூட காற்று வர வேண்டி top hung ஆக திறக்க வசதி இருந்துள்ளது, இந்த பேருந்தின் மாடல் 1961 Bedford C with Duple body என்பதாகும்.
இந்த பேருந்துக் காட்சி இயக்குனர் S.பாலசந்தரின் அவனா இவன்? என்ற 1962 ஆம் ஆண்டின் தமிழின் Noir திரைப்படத்தில் பள்ளிக் குழந்தைகள் பள்ளி சுற்றுலா செல்கையில் வருகிறது,
இதன் நாயகர் S.பாலசந்தர் பணக்கார வீட்டுப் பெண்ணை மணக்க தடையாக இருக்கும் தன் புது மனைவியை இங்கே தன் standard harold காரில் முட்டுக்காடு காயலுக்கு பிக்னிக் அழைத்துவந்து கட்டையால் அடித்து ,வயிற்றில் கயிற்றைக்கட்டி கல்லில் இணைத்து இந்த காயலில் தூக்கிப் போடுகிறார்,
அந்த கொலையை இரு சிறார்களான குட்டி பத்மினியும் மாஸ்டர் ஸ்ரீதரும் அந்தக் காட்சியைப் ஒளிந்திருந்து காண்கின்றனர்,
கருப்பு ஏவியேட்டர் கண்ணாடியை துவக்கம் முதல் கடைசி வரை கழற்றாத நாயகர் S.பாலசந்தர், அவரின் புதிய பணல்கார சம்பந்த திருமணத்தை முறியடித்து, அவரை போலீஸில் இரு சிறார்கள் சிக்க வைக்கும் கதை இது, யூட்யூபில் உள்ளது.
அன்றைய முட்டுக்காடு படகுகுழாம் வரும் முன்பும் அங்கு இருந்த காயல் மற்றும் தொலைநோக்காக ஏரிக்கரையில் நெருக்கி நட்டு வைத்த மரங்கள் எல்லாம் இந்த இணைப்பு படங்களில் பாருங்கள், இன்றைய வண்ணப்படங்களையும் பாருங்கள்.
முட்டுக்காடு படகு குழாம் 1984 ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது., நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் வரும் உன்னைத்தானே பாடல் இங்கு படமாக்கப்பட்டுள்ளது, அது தவிர நூறு படங்கள் இந்த காங்க்ரீட் பாலத்தின் மீது படமாக்கப்பட்டுள்ளது, இந்த காயல் ஆழம் குறைவானது மூன்றடி முதல் ஆறடி இருந்தது பல திரைப்படங்களில் கொலை மற்றும் தற்கொலை காட்சிகள் படமாக்குவதற்கு வசதியாக இருந்துள்ளது.
1985 ஆம் ஆண்டு இந்த படகுக் குழாம் துவங்குவதற்கு முன்பாகவே முட்டுக்காடு பெயரெடுத்த பிக்னிக் ஸ்பாட்டாக இருந்துள்ளதை கார் செல்லும் அணுகுப்பாதை மூலம் அறிய முடிகிறது, இங்கே கருப்பு வெள்ளை படத்தில் படகு கட்டுவதற்கு இரண்டு காங்க்ரீட் குட்டைத் தூண்கள் இருந்ததையும் பாருங்கள்.