எத்தனை அழகிய குடும்பம் பாருங்கள்.
இன்று eligible bachelor களுக்கு கூட மணமாவதில்லை, மணமானால் பிள்ளைச் செல்வம் இல்லை, அப்படி இருக்க எல்லாம் காலத்தே கிடைக்கப் பெற்றவர்கள் எப்படி தம் உயிரையும் மாய்த்துக் கொண்டு வீட்டாரையும் கொல்கின்றனர்?
சூதாடியாக பார்த்து திருந்தாவிட்டால் சூதாட்டத்தை ஒழிக்க முடியாது.
கூட்டுத் தற்கொலை குடும்பத்தாரை கொலை செய்வது எதற்கும் தீர்வல்ல.
1.ஏன் நமக்கு கடன் என்பதை கடனாளி ஆராய வேண்டும்.
2. அந்த அடிமைத்தனத்தில் / கடும் செலவினத்தில் இருந்து வெட்டிக் கொண்டு வெளியே வர வேண்டும்,(செய்யும் மாதாந்திர செலவில் 1₹ குறைத்தால் கூட வெற்றி தான்)
3. கடனை அடைக்க தவணை கேட்க வேண்டும்,
4.தர வேண்டிய கடனை நேர்மையாக நியாயமாக போராடி முழுதும் அடைக்க வேண்டும்,மாதா மாதம் நேரில் சென்று அடைத்து கடன் தந்தவர்களிடம் நற்பெயர் பெற வேண்டும்.
5. இருவர் வேலைக்குப் போய் ஒருவர் வருமானம் முழுக்க குடும்பம் நடத்தவும், இன்னொருவர் வருமானம் முழுக்க கடன் அடைக்கவும் வேண்டும்.
கண்டிப்பாக எப்படிப்பட்ட கடனும் கூட அடைந்து விடும், கடனை தீர்க்காமல் இறந்து போனாலோ ஒரு தண்டனையை அடையாமல் இறந்து போனாலோ அந்த கடனை அடைக்கும் வரை தண்டனையை அடையும் வரை திரும்ப திரும்ப பிறப்பு தொடரும்.
#சூது_கவ்வும்