கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதி மகளை எழும்பூரில் உள்ள IELTS தேர்வு மையத்தில் கொண்டு விட்டு நான்கு மணி நேரம் அங்கே எழும்பூர் சரகத்தில் படமெடுத்தபடி பாதசாரியாக சுற்றிக்கொண்டிருந்தேன்.
மகள் தேர்வு மதிப்பெண்கள் இப்போது கிடைத்தன 9 க்கு 8.5 எடுத்திருக்கிறாள், ஒரு வாரம் அவர்கள் அனுப்பிய புத்தகத்தை மட்டும் படித்தாள், ஏற்கனவே +2 பாடச்சுமை, உடன் IIT நுழைவுத்தேர்வு பாடச்சுமை என ஏழுநாளும் பணிச்சுமை, நான் அவள் சொன்ன தேர்வுக்கு பணம் கட்டுவேன், விண்ணப்பத்தில் கையொப்பமிடுவேன், நேரில் கொண்டு விடுவேன் கூட்டி வருவேன், அவ்வளவு தான்.
வீட்டில் நாங்கள் நால்வரும் தமிழ் மட்டுமே பேசுவோம், எனக்கு தமிழ் தெரிந்தவரிடம் ஆங்கிலத்தில் பேச நாவெழாது,சுற்றி வளைக்காமல் தமிழில் நேராக சொல்ல முடியும் என்பதால் தான்,வீட்டில் எந்த ஆங்கில தினசரியும் வாங்குவதில்லை,மகளுக்கு harry potter மற்றும் lord of rings புதினங்களை மொத்த volumes வாங்கித் தந்து ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் ஆர்வம் வரவழைத்தேன், மகளின் ஆங்கில ஆசிரியை மகளுக்கு வகுப்பில் நன்றாக ஆங்கிலம் பயிற்றுவித்தவர், மகள் பள்ளி மேடைநிகழ்ச்சி தனியே தொகுக்க தூண்டுதலாக இருந்தவர், மூன்றாம் வகுப்பில் british council summer camp சேர்த்ததும் மகளுக்கு ஆங்கிலத்தில் தன்னம்பிக்கை தந்தது, இந்த C2 band (native level proficiency) மதிப்பெண் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.