இந்த வருடம் படித்ததில்
முக்கியமான புத்தகம்
"ஒரு நாயகன் உதயமாகிறான் ", அதிகம் கண்டுகொள்ளாமல் போன புத்தகம், காரணம் இன்று மாற்று சினிமா சுயாதீன சினிமா என்றாலே பல பேருக்கு விளங்காத நிலை தான் உள்ளது, அதிலும் மாற்று சினிமாவில் method acting செய்து சாதித்தும் தமிழ் சினிமாவாவால் கண்டு கொள்ளாமல் போன நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் எழுதிய அபாரமான புத்தகம் இது.
மாற்று சினிமா என்பது தோல்வியல்ல.
மாற்று சினிமாவுக்கு உழைப்பது என்பது தோல்வியல்ல.
லாப நோக்கமற்ற மாற்று சினிமா பல சிரமங்களுக்கிடையில் தயாரித்து niche audience ற்கு தேடி திரையிடுவதும் அதை விடாமுயற்சியுடன் உலக சினிமா திருவிழாக்களில் விண்ணப்பித்து திரையிடுவதும் தோல்வியல்ல., குறிப்பாக இந்த டூலெட் திரைப்படம் வெகுஜன பார்வையாளர்களிடத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம்.
நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் ஒளிப்பதிவாளரும் கூட, ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்து பல திரைப்படங்கள் தொடர்ந்து பணியாற்றியவர், இதில் நடிகராக , உதவி இயக்குனராக பங்களித்திருந்தார்,இயக்குனர் செழியன் மனதில் நெடுநாளாக அசைபோட்டு வந்த Neo realism படைப்பான Tolet திரைப்படத்தின் கதையை , தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்காத நிலையில் தானே தன் சொத்துக்களை விற்று தயாரித்து இயக்கிய வலிமிகுந்த கதையை மிக அழகாக இந்த தன் வரலாற்று புத்தகத்தில் விவரிக்கிறார், புத்தகத்தை இயக்குனர் செழியனுக்கு அற்பணித்துள்ளார் .
ஆடம்பரமான ஜோடனையான எழுத்துநடை இல்லாததால் அழகாக நாமும் உள்வாங்கி புத்தகத்தை தொடர முடிகிறது.
Tolet படத்திற்கு சென்னை நகரெங்கும் , குழுவினர் தங்கியிருக்கும் இடத்துக்கு அண்மையில் வீடு தேடி ,கண்டறிந்தது,பழைய ஓடி முடிந்து தேய்ந்த tvs 50 ஐ தேடி வாங்கியது, எண்கள் அழிந்த பட்டன் போன் இரண்டை இயக்குனரின் வீட்டில் தேடித் தேற்றி இந்த period படத்திற்கான production cost ஐ சிறிது மிச்சம் செய்தது , மெல்ல தன் மனைவியாக நடித்த நடிகை ஷீலா, குழந்தை நட்சத்திரம் தருண் இவர்களுடன் படத்தில் realism இயல்பாக கொண்டு வருவதற்கு வேண்டி மெனக்கெட்ட நாட்கள், நாட்கணக்கான ஒத்திகைகள் என நிதானமாக படப்பிடிப்பு நாட்களை விவரிக்கிறார்.
திரைப்படக்கல்லூரியின் அனைத்து துறை மாணவர்களுக்கும் இதில் பாடம் உள்ளது, காரணம் அதான் எனக்கு தெரியுமே என்ற மனநிலையும், over smartness மனநிலையும் இன்று அநேகம் மாணவர்களின் மூளையை கற்க விடாமல் மழுங்கடித்து விடுகிறது, நமக்கு முன் சாதித்தது கோடி, கற்றது கைமண் அளவு என்ற களிமண்ணாக தன்னை ஒப்படைப்பவனே திரையில் காலத்துக்கும் பேசப்படும் படைப்பில் நிற்க முடியும்.
இந்த புத்தகத்தை திரைப்பட கல்லூரி மாணவர்கள் புத்தக திருவிழாவில் வாங்கி படியுங்கள், நிச்சயம் நீங்கள் துறை விட்டு துறை மாறுகையில் அதற்கான உழைப்பு இருந்தால் அந்த புதிய முயற்சியை அர்த்தமுள்ளதாக்கலாம் என்ற பாடம் இதில் மிக விரிவாக உள்ளது,
அந்த core theory ஐ ஒருவர் கற்க வேண்டும் என்றே தன் பட்டபாடுகளை இவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
இதில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் தான் ஏறி வந்த ஏணிகள் ஒவ்வொருவரையும் அத்தியாயங்களுக்கிடையில் நன்றி கூறுகிறார், சினிமாவில் காண முடியாத அரிய பண்பு அது. கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் இவர், ஆனால் தன் தந்தை பெயரை எங்கும் உபயோகிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளவர்.
இந்த புத்தகம் பற்றி பல மாதங்கள் முன்பாகவே எழுத வேண்டியது, சக நண்பர் ஒருவரிடம் அவர் இந்த சுயாதீன திரைப்படத்திற்கு வரைந்த தன்னார்வ fan போஸ்டர்களின் படங்களைக் கேட்டேன், தந்திருந்தால் tolet பற்றியும் விரிவாக என் பாணியில் எழுதியிருப்பேன்,அவரும் அனுப்பாமல் நானும் எழுதாமல் விட்டு விட்டேன், புத்தக திருவிழா வருவதால் இந்த புத்தகத்தை எழுதியே ஆக வேண்டும் என எண்ணி எழுதுகிறேன்," நம் " பதிப்பகம் வெளியீடு இது.
தாமதமாக எழுதினாலும் இந்த நல்ல புத்தகத்தை பற்றி எழுதுவதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
Santhosh Nambi
நடிகர் சந்தோஷ் நம்பிராஜனின் புதிய திரைப்படமான வட்டார வழக்கு டீசர் அத்தனை நம்பிக்கை அளிக்கிறது, 2008 ஆம் ஆண்டு பருத்திவீரன் , சுப்ரமணியபுரம் படங்கள் போல அலையை உருவாக்கும் எனத் தோன்றுகிறது, படக்குழுவினருக்கு நல்வாழ்த்துகள்.
வட்டார வழக்கு டீசர் இங்கே https://youtu.be/J9csn6bsU-c