வீடுகட்ட பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் முன் அவர்கள் கட்டிய வீடுகளை சென்று முதலில் பார்வையிடுங்கள், அவர்களின் client போன் நம்பர் வாங்கி அபிப்ராயம் கேளுங்கள், சொன்ன specs ற்கு , சொன்ன தொகைக்கு, சொன்ன தேதிக்கு அவர் கட்டி முடித்தாரா? அவர்களுக்கு திருப்தியா? சண்டைக்காரரா? என கேளுங்கள்,
அவர்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்திய கட்டிட வரைபடங்கள்,approvals வரைபடங்கள், முக்கியமாக structural engineer தந்த foundation ,column, plinthbeam,roof slab,sump கம்பி வரைபடங்களை காட்டச் சொல்லுங்கள்.இது உங்கள் எதிர்கால நன்மைக்கு என்று கருதி தயங்காமல் கேளுங்கள்.
அதன் பிறகு அவர்களுடன் சதுர அடிக்கு வசூலிக்கும் கட்டணத்தில் எவையெவை அடங்கும் அடங்காது என detail estimate கேட்டு வாங்கி, எழுத்துபூர்வமாக ஒப்பந்தமிட்டு கையொப்பமிடுங்கள்.
உங்கள் வீட்டை கட்டுமானம் செய்பவர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் இதைக் கேட்பது நன்றே,
உங்கள் வீட்டிற்கு structural engineer தரும் வரைபடங்களுக்கான consultation இன்றியமையாதது, இதற்கு சதுர அடிக்கு 3 ரூபாய் வரும் ,கூரை காங்ரீட் ஜல்லி போடுகையில் structural engineer கூரை கம்பிகளை சென்ட்ரிங்கை பார்வையிட வந்தால் ரூபாய் 2000 தரவேண்டும் ,
உங்கள் வீட்டை கட்டுபவர்கள் அந்த professional fees நீங்கள் தர வேண்டும் என்றாலும் தயங்காதீர்கள் , இதன் மூலம் கணிசமான கம்பி மற்றும் சிமெண்ட் மணல் கட்டுமானத்தில் மிச்சமாகும். under design , over design தடுக்கப்படும்.
உங்கள் வீட்டுக்கு தோராயமாக 18 தூண்கள் (columns ) வரும் உத்தேசமான 9X9 அளவு என்று மேஸ்திரி மூலைக்கு ஒரு காலம் அமைப்பார் ,ஆனால் அது தவறு , ஒரு ஸ்ட்ரக்சுரல் பொறியாளர் மட்டுமே இதன் எடைக் கணக்கீடுகளை சரிவர செய்ய முடியும், அதற்கு சதுர அடிக்கு வெறும் 3 ரூபாய் கேட்பார்கள், உங்களுக்கு கம்பி டிசைன் சரியாக வடிவமைப்பார்கள், மேஸ்திரி கூடுதலாகவோ குறைவாகவோ பாதுகாப்பின்றி கம்பிகளின் விட்டம் மற்றும் இடைவெளியை தீர்மானிப்பார்கள், பொறியாளர் மட்டுமே உங்கள் கூரைக்கு ரூஃப் பீம் அமைப்பார், சரியாக பெல்ட் பீம் ,ப்ளிந்த் பீம் அமைப்பார், சம்ப் சுவர்கள்,அடியில் மேட் ,மேல்நிலைத் தொட்டி தரை ,சுவர்கள்,அதன் மூடி என டிசைன் செய்ய வேண்டும், இது விளையாட்டல்ல, ஐம்பது வருடங்கள் நீங்கள் வாழப்போகிற வீடு,அதை தரமாக பாதுகாப்பாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் சிறிய செலவில் உள்ளது.
இது உங்கள் வாழ்க்கைக்கான முதலீடு, அதை முழு திருப்தியுடன் செலவழித்து பாதுகாப்புடன் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
முக்கியமாக சமூக வலை தளங்களில் இது போல கவர்ச்சியான படங்களை போட்டு சதுர அடி 1400 ரூபாய்க்கு கட்டுமானம் செய்து தருகிறேன் என கிளம்பியிருக்கின்றனர், இந்த எவரோ கட்டிய வீட்டின் படங்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் எடுத்து மிக எளிதாக பதிவேற்ற முடியும்,எனவே நான் கேட்டது போல நீங்களும் கேள்வி கேளுங்கள்.
PS: வீடுகட்ட வடிவமைக்க Architect fees தர யோசித்து அவரை அணுகி வடிவமைக்காவிட்டால் சரி போகிறது ,அந்த வேலை பார்க்க கண்ணறாவியாக இருக்கும்,
Aesthetics, Massing, Function,Climatology இவற்றிற்கு ஏற்ப இருக்காது,
ஆனால் உங்கள் வீடு கட்டுமானத்துக்கு structural engineer advise மிகவும் முக்கியம் அதில் காசு மிச்சம் செய்து விளையாடுவது அதில் வசிக்கும் வீட்டார் உயிருடன் விளையாடுவது போல.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#1400_ஓவாய்,#மார்கெட்_ஆள்,#முறைவாசல்_வேலை,#கம்பி_வரைபடம்,#structural_drawing,#site_visit