உப்புதண்ணீரில் கட்டிடம் கட்டுதல், தரமற்ற அதிக ஈரம் உரிஞ்சும் சூளை செங்கற்களால் சுவர் கட்டுதல், மொட்டை மாடியில் வெதரிங் கோர்ஸ் பழுது ஏற்படுதல், வாட்டம் (slope )சரிவர இல்லாமல் இருத்தல்,தரமற்ற அதிக ஈரம் உரிஞ்சும் சிவப்பு கண்டி ஓடுகளால் (pressed terracotta tiles) வேய்திருத்தல், வெதரிங் கோர்ஸில் உபயோகித்த தரமற்ற சுர்கி (பூஞ்ஜல்லி) நீரை sponge போல உரிஞ்சி மெல்ல slab ல் ,வெளிப்புற சுவற்றில் கசியவிடுவதால் நிகழும் பேரவலம் இது.
ஒருவேளை வீட்டுக்குள் இருக்கும் toilet சுவர்களின் வெளியே இப்படி ஓதம் வைத்தால் 20 வருடங்களுக்கு முன் plumbing ற்கு உபயோகித்த GI அல்லது காப்பர் குழாய்கள் உப்பு நீர் உபயோகத்தால் நசிந்து ஒழுக ஆரம்பித்ததால் ஓதம் வரலாம், அப்போது தரமான PVC pipes, வெந்நீருக்கு காப்பர் குழாய், கொண்டு re plumbing செய்ய வேண்டும்.
ஒரு முறை இப்படி ஓதம் வைக்க ஆரம்பித்துவிட்டால் அதற்கு எத்தனை லட்சம் செலவு செய்தாலும் தீர்வு கிடைக்காது, வாட்டர் ப்ரூஃபிங் கம்பெனிகாரர்கள் நான் இதற்கு தீர்வு வைத்திருக்கிறேன் என முன் வந்தால்,வேலை துவங்கும் முன் அவர்கள் செய்த பழைய வெற்றிகரமான வேலைகளைப் போய் பாருங்கள், வீட்டுக்காரர்களிடம் feed back கேளுங்கள் , கம்பெனியாரிடம் ஐந்து வருடம் உத்திரவாதம் ஒப்பந்தம் செய்து தரமுடியுமா என கேளுங்கள்,
அப்படி ஒத்துவரவில்லை இல்லை என்றால் ஓதம் பரவும் toilet உட்புற சுவரில் புள்ளி போட்டு தரமான கலவை கொண்டு பூசி அறையின் முழு உயரத்துக்கு tiles ஒட்டுங்கள்,இந்த ஓதம் பரவும் சுவரிலும் முழு உயரத்துக்கு tiles ஒட்டுங்கள்,20 வருடத்துக்கு மேல் ஆயுள் கொண்ட கட்டிடங்களுக்கு இம்முறையே என் அனுபவத்தில் தீர்வை தந்துள்ளது, இதன் மூலம் டைல்ஸ் ஒட்டிய சுவர் வியர்க்காது,கசியாது,சுவற்று செங்கல்லுக்குள் ஊறிய ஈரம் நல்ல வெயில் வந்ததும் உலர்ந்துவிடும்.
இந்த சுவர ஓதத்திற்கு வேறு தீர்வு இல்லை, அப்படியே இருந்தாலும் செய்யும் செலவிற்கு பலன் இருக்குமா எனத் தெரியாது,
ஓதம் ஊறும் சுவரில் நல்ல plain vitrified tile வாங்கி முறையாக ஒட்டுங்கள்,
சுவர் பூச்சை இடித்து என்ன தான் மீண்டும் water proofing செய்து பூசினாலும் மீண்டும் ஓதம் வரும் , ஜிப்சம் பூச்சில் பட்டி பார்த்தாலும் இது மீண்டும் ஊறி வரும்,
அப்படி முழுக்க டைல்ஸ் போட யோசித்தால் பழைய ஆஸ்பத்திரிகளில் சுவரில் எனாமல் பெயிண்ட் அடிப்பார்கள், அப்படி முறையாக தேய்த்து பட்டி பார்த்து விட்டு எனாமல் பெயிண்ட் அடிக்க ஓதத்தில் பெயிண்ட் உறிவது கட்டுப்படும், இது சற்று விலை குறைவான வழி.
புதிய வீடு கட்டினால் சேம்பர் செங்கல் போகாமல் wire cut brick போகவும், நல்ல தண்ணீர் வாங்கி எல்லா கட்டுமான வேலைக்கும் பயன்படுத்தவும்.
ivory கலரில் ,அல்லது beige கலரில் less smoke ,less grains vitrified tiles செலக்ட் செய்து ஓதம் ஊறும் சுவரில் ஒட்டுங்கள்
PS:புதிதாக வீடு கட்ட செங்கல் வாங்குபவர்கள் நல்ல முதல் தரமான wire cut,table moulded செங்கல்லை மட்டும் பயன்படுத்துவது நல்லது, அப்படி தேர்வு செய்து வீடு கட்டினால் அக்கட்டிடம் ஐம்பது வருடங்கள் கடந்தும் கடும் மழை , கடும் தட்பவெப்பத்துக்கு தாக்குப்பிடிக்கும்,ஓதம் வைக்காது.செங்கல் பரிசோதனைக்கு இந்த பதிவை படியுங்கள் https://m.facebook.com/story.php?story_fbid=10159249498266340&id=750161339
#ஓதம்,#மழைநாள்_ஓதங்கள்