உங்கள் வீட்டைக் கட்ட பொறியாளரை நியமிக்காமல் இப்படி கொத்தனாரிடம் லேபர் கான்ட்ராக்ட் விட்டால் இப்படி பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டு அவசர அடி அடித்து வேலையை முடித்து போவார்,அவரை அதற்கு பின் எத்தனை தேடினாலும் பிடிக்க முடியாது,எப்போதும் கொத்தனார் படித்த பொறியாளர் மேற்பார்வையில் பணி செய்வது நல்லது,
இது ஒரு டிவி ஷோகேஸ் , இது வெளிப்புற சுவர் ஆதலால் 9" கனம் இருக்க வேண்டும்,ஆனால் இந்த கொத்தனார் அதை துண்டு கம்பிகள் கொண்டு bearing (ஏறுவாசி) எதுவுமின்றி, கோழிவலை கூட இறுக்கி கட்டாமல் gravel chips கலக்காமல் வெறும் சிமெண்ட் மணல் , சிமெண்ட் மாவு அப்பி பூச்சுவேலை செய்கிறார் அதிகபட்சம் இதன் கனம் 2 அங்குலம் தான் இருக்கும்,
எந்த நோஞ்சான் திருடனும் வெறும் சுத்தி கொண்டு இந்த டிவி ஷோகேஸை உடைத்து திருட முடியும், ஓதம் வைக்கும், சூடு இழுத்து தரும்,
இது போல தரமற்ற அவசர அடி வேலைகள் சமீபத்தில் பெரிய ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பதால் இதை எழுதுகிறேன்,
கொத்தனாருக்கு உங்கள் வீட்டை லேபர் கான்ட்ராக்ட் தந்தவர்கள் அங்கேயே நாற்காலி போட்டு அமர்ந்து வேலை செய்வதைப் பாருங்கள், இல்லாவிடில் இது போல தலபாஸ்திரி செய்து விடுவார்கள், படிப்பறிவோ பட்டறிவோ இல்லாத கொத்தனார்கள்,அவர்கள் இலக்கு எத்தனை சீக்கிரம் வேலை முடித்து உங்களிடம் பணத்தை பீராய்ந்து வெளியேறுவது ஒன்று தான்.
இது போல விட்டேத்தியாக கட்டப்படும் வீடு பத்து வருடங்கள் கூட தாங்காது என்பது கண்கூடு,
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#கொத்தனார்_அட்டூழியம்,#தரமற்ற_கட்டுமானம்