தஞ்சை பெரிய கோவிலின் கோட்டைச் சுவரை ஓட்டிய பிரகாரம் இது, இங்கே நாம் 252 பக்த லிங்கங்களை தரிசனம் செய்யலாம்,சுவற்றில் தஞ்சை மன்னர்கள் காலத்து fresco பாணி சுவர் ஓவியங்களைக் காணலாம், இதற்கு இரும்பு கிராதி தடுப்பு உண்டு, இப்போது எல்லா லிங்கத்திற்கும் கும்பாபிஷேகத்திற்கு வேண்டி பாலாலயம் செய்துள்ளனர்
இங்கே பெரிய கோவிலை 1950 ஆம் ஆண்டு மராமத்து செய்த பொழுது தஞ்சையின் பழமையான அச்சகமான வெற்றிவேல் ப்ரெஸ் நிறுவனத்தார் இந்த பிரகாரத்துக்கான சிமெண்ட் தளத்தை (Granolithic flooring ) தரமாக செய்து தங்கள் பெயரையும் உபயதாரர் என பொரித்துள்ளனர்,
அந்த impression கூட 70 வருடங்களாக அரிக்காமல் தாங்கி நிற்கிறது, இந்த வழுவழுவென்ற சிமெண்ட் தளம் அந்த நீண்ட சுற்றுப்பாதை மண்டபத்தில் நடக்க கால்களுக்கு இதமாக இருக்கிறது, இன்று இது போல Granolithic flooring செய்ய எத்தனையோ நவீன உபகரணங்கள் வந்து விட்டாலும் , அந்த தரம் நேர்த்தி எத்தனை காலம் ஆண்டு வரும் என்பதெல்லாம் புதிரே!!!
#பெருவுடையார்கோவில்,#பக்தலிங்கம்,#bigtemplecorridor,#granolithicfloor,#cementfloor