சமீபத்தில் எங்கள் வீட்டு கிணற்றின் கைப்பிடிச்சுவர் உயரம் கூட்டினோம், இங்கு நாய் விழுந்து விடும் அபாயம் உண்டு,இங்கு கிணற்றில் பறவைகள் நீர் குடிக்க வரும் குறிப்பாக காகம்,கிளிகள்,குருவிகள் ,எனவே இதை வெலட் மெஷ் இட்டு மூட மனமில்லை, இந்த தலைமுறை அடுக்ககவாசி குழந்தைகளுக்கு கிணறு என்றால் தெரியவில்லை எனவே அவர்கள் இதில் இறங்காமல் இருக்க grill செய்யக் கேட்டோம்,
~6000 ₹ சொன்னார்கள், சமீபத்தில் நடந்த கட்டுமானப்பணியில் மீதமான 12 mm rod மற்றும் PVC electric pipe இருந்தது அதற்குள் tor steel ஐ செருகி 5 அங்குல spacing ல் அடுக்கி சுற்றிலும் எஞ்சிய செங்கல் கொண்டு கட்டுவேலை செய்து விட்டோம்,
கம்பி துருபிடிக்காமல் இந்த casing நின்று காக்கும் என்பது திண்ணம்,100 கிலோ ஆள் நின்றாலும் இந்த கம்பிகள் வளையவில்லை, நல்ல புத்தி சாதுர்யமும் அதை செய்ய நல்ல கொத்தனாரும் இருந்தால் இது போல zero wastage தற்சார்பு கட்டுமானம் அமைக்க முடியும், இதைத் தான் காலம் முழுக்க காந்தியவழியில் எளிமையாக வாழ்ந்த லாரி பேக்கர் செய்தார், ஒரு வேலை செய்தால் எத்தனை பணம் வருகிறது என கணக்கு போடாமல் ஆத்ம திருப்திக்கு உழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
கட்டுமானப் பொருட்களை தேவைக்கு மட்டுமே வாங்கவும் பயன்படுத்தவும் வேண்டும், மாற்றி யோசிப்பது ஒன்றே இன்று வீடு கட்டுவதற்கு ஏற்ற வழி.
Ps: இந்த கிணற்றை எங்கள் அடுக்கககத்தில் யாரும் உபயோகிப்பதில்லை, இதற்கு செலவின்றி ஒரு பாதுகாப்பு அரண் அமைத்து வெற்றி கண்டோம், இதற்கு மேல் செலவு செய்வது கழுதைக்கு சிங்காரம் செய்வது போல.
#தற்சார்பு_கட்டுமானம்,#லாரி_பேக்கர்,#zero_wastage