நாயகன்1
நாயகன் படத்தின் 1080 p HD தரத்தில் அமைந்த ப்ரிண்ட் பார்க்க கிடைத்தது.
ஆங்கில சப்டைட்டிலுடன் இருக்க மலையாள நண்பர்களுக்கும் இந்தி நண்பர்களுக்கும் தந்தேன் ,படத்தை மிகவும் சிலாகித்தனர்(வெளிநாட்டு , வெளிமாநில இந்தியப் பட ரசிகர்களுக்குத் தந்து பார்க்க சொல்லலாம் )
இப்படம் வெளியாகையில் விகடன் விமர்சனக்குழுவில் இருந்த தற்குறிகள் இளையராஜாவை மிகவும் மட்டம் தட்டி விமர்சனம் எழுதியிருந்தனர்.
(விகடனில் கவிக்குயில் 1977 படம் தொடங்கி தான் இந்த சினிமா விமர்சனத்துக்கு மதிப்பெண் தரும் வேலையைத் தொடங்கினார்களாம், அவர்களிடம் இரண்டு பேர் விமர்சகர்கள் இருந்தனராம், கிராமப் படங்களுக்கு, எழுதுபவர் நகர படங்களுக்கு எழுதுபவர், எல்லா படங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட மானே தேனே டெம்ப்ளெட் பின்பற்றப்படும், சில படங்களில் க்ளைமேக்ஸ் ஸ்பாய்லர் கூட உடைக்கப்படும்,ஏனைய நம்மாட்களுக்கு வெறும் ப்ரெசன்டேஷன் இருந்தால் போதும் டீடெய்ல் வேண்டாம்.)
படத்தில் இசைஞானி இசை முற்றிலும் புதுமையான வேறொரு பரிணாமத்தில் அமைந்திருக்கும், ஒளிப்பதிவு மிகுந்த தொலைநோக்கானது, புதுமையானது, நிறைய கேன்கள் பிலிம் செலவு செய்து பரீட்சார்த்தம் செய்து இன்டஸ்ட்ரிக்கு ஸ்டாண்டர்ட் உருவாக்கிவிட்டு, இனி மேல் அப்படித்தான் என ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்,
கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தில் கிடைத்த பட்டறிவே இதற்கு முக்கிய காரணம். ஒரு படம் வெற்றியோ தோல்வியோ அதை சமரசமின்றி தரவேண்டும், நல்ல குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நல்ல காலத்தால் அழியாத படங்களைத் தர வேண்டும் என நினைத்தார்.
1986 பொங்கலுக்கு வெளியான கமலின் சொந்தத் தயாரிப்பான விக்ரம் படத்துக்கு வி.ரங்கா அவர்கள் ஒளிப்பதிவு,படத்தின் இயக்கம் ஃபார்முலா பட மன்னரான ராஜசேகர் அவர்கள், அவரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வி. ரங்கா , இருவரும் அத்தனை வேகத்தில் படத்தை முடித்து குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதில் ஜித்தர்கள்.
இயக்குனர் ராஜசேகர் + வி.ரங்கா அதே ஆண்டில் விக்ரம் படத்துடன் படிக்காதவன் காக்கிசட்டை, இந்தி கங்குவா உட்பட முன்று படங்கள் முடித்து வெளியிட்டுள்ளனர், விக்ரம் படத்தின் நீளம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் எத்தனை விறுவிறுப்பான கதை, விதவிதமான லொக்கேஷன்கள், எத்தனை நடிகர்கள்.படம் 1984ம் ஆண்டு துவங்கி ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக 1986 ஆம் ஆண்டு தான் வெளிவந்தது
நாயகன் படமும் உருவாக நீண்ட காலம் எடுத்ததை நாம் அறிவோம், பார்த்துப் பார்த்து , மொத்தமாக சுமார் 4 மணி நேரம் படமாக்கியதில் எது வேண்டாம் என களையவே இத்தனைக் காலம் எடுத்துள்ளது.படத்தின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் பேட்டியையும் தேடிப்படியுங்கள், ஒரு தரமான, பிரம்மாண்டமான படமாக நாயகன் எத்தனை தடைகளைத் தாண்டி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது
நான் பார்த்த நாயகன் படத்தின் நீளம் 2-மணி 35 நிமிடங்கள், ஏ சான்றிதழ் பிரதி இது
பிஸி.ஸ்ரீராம் நாயகன் செய்வதற்கு முந்தைய வருடம் மௌனராகம் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றினார், அதற்கு முன் மீண்டும் ஒரு காதல் கதை, பூவே பூச்சூடவா, நீதானா அந்தக் குயில், போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்,
இந்திய சினிமாவில் நாயகன் படத்தின் ஒளிப்பதிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆத்மார்த்தமாக உழைத்தனர்,அந்த உழைப்புக்கு அபாரமான பலன் கிடைத்தது. இதில் டைட்டில் ஸ்க்ரோலில் ஒளிப்பதிவாளர் பி.ஸி.ஸ்ரீராம் அவர்களின் உதவி ஒளிப்பதிவாளர்கள் பெயர்களைப் பார்த்தேன்,
அதில் ஜி.பி.கிருஷ்ணா ( தசரதன் , துறைமுகம் பட ஒளிப்பதிவாளர்) மற்றும் ஒளிப்பதிவு பேராசிரியர், இவரின் விரிவுரை கானொளிகள் யூட்யூபில் கிடைக்கின்றன.
இரண்டாமவரான கோபால் லவ்டுடே மற்றும் துள்ளித்திரிந்த காலம் , மகாபிரபு படங்களின் ஒளிப்பதிவாளர் ( தகவல் நன்றி இயக்குனர் அஜயன் பாலா ,ரெவித்தம்பி பொன்னன்)
ஜீவன் எ ஜீவா நம் மனம் கவர்ந்த 12பி, உள்ளம் கேட்குமே காதலன் , இந்தியன் படங்களின் ஒளிப்பதிவாளர்,
பாலு எ பாலமுருகன் சின்னஜமீன் , சீமான், சமஸ்தானம் படங்களின் ஒளிப்பதிவாளர்,
மீதம் ஒருவரான அப்துல் ரஜீத் பற்றி தகவல் கிடைக்கவில்லை, விளம்பரப் படத்துறையில், சீரியல் ஒளிப்பதிவாளர்களாக மாறினாரா? தெரியவில்லை, யாருக்கேனும் தெரிந்தால் குறிப்பிடவும்.
இது ஒளிப்பதிவு தகவல்களுக்கு மட்டுமான பதிவு, வேறு பதிவுகளில் படக்குழுவின் மற்ற துறைகளை விவாதிக்க எண்ணமுண்டு
#நாயகன்