எழுத்தாளர் அசோகமித்திரன் தன் "தேள்" கதையில் இப்படி ஆபூர்வமான தகவலை எழுதியிருந்தார்.
இரட்டைக்குழந்தைகளுக்கு தேள் பயம் இருக்காதாம்,தேள் அவர்களைக் கடித்தாலும் கடுக்காதாம்.
இரட்டைக் குழந்தையாகப் பிறந்தவர்கள் நீவிவிட்டால் சுளுக்கு அகலுமாம்
ஆனால் இவற்றுக்கெல்லாம் விஞ்ஞானபூர்வமாக விளக்கங்கள் இல்லை என்றும் எழுத்தாளர் சொல்கிறார்.
இதே கதையில் இவருக்கு கால் முறிந்திருந்ததொரு சமயத்தில் இவர் கங்கையில் பித்ரு தர்ப்பனம், ஸ்நானம் செய்யப் போனதைப் பகிர்கிறார்,
அப்போது இவர் காசி போனது இரண்டாம் முறையாம், இவரைக் குளிக்க கூட்டிப்போனது மிகவும் பூஞ்சையான சாதுவான ஒரு மராத்தியராம்,
இவருக்கு படிகள் இறங்க முடியாததால் தசாஸ்வமேத கட்டம் ( dasaswametha ghat) என்ற கங்கை துறைக்கு இவரை அழைத்துப் போயுள்ளார், இவர் அங்கே மணலில் அமர்ந்து,தவழ்ந்து இறங்கி முக்கு போட்டதை நினைவு கூர்ந்தார்.
அந்த சாதுவான மராட்டியருக்கு Irony ஆன பெயர் இருந்ததாம்,
வாக்மாரி, அப்பெயருக்கு அர்த்தம் புலியை வென்றவனாம்.
பாம்புகள் கனவில் வருவது இறப்பைக் குறிப்பதாக பகிர்ந்திருந்தார்,
இவர் கனவில் தொடர்ச்சியாக பாம்புகள் தென்பட்ட அந்த மாதத்தில் இவரின் அப்பா இறந்து போனதைப் பகிர்ந்தார்.
"நட்சத்ரேயனைத்தான் பட்சிப்பேன்" என்ற சொலவடைக்கேற்ப இவர் அப்பாவும் அம்மாவும் மட்டும் மிக சிக்கனமாக செலவழித்து காசி போயிருக்கையில் அவர் பர்சை ஒருவன் திருடிவிட்டானாம்,
அப்பா ஊருக்கு திரும்பியதும் யாருக்கோ ₹ஐம்பதை மணி ஆர்டர் செய்தாராம்.
எழுத்தாளரின் "கோணல் கொம்பு எருமை மாடு"கதையில்
மாட்டின் மடிக்காம்புகளில் எல்லா காம்பிலும் ஒட்ட கறக்கக் கூடாதாம்,
கன்றுக்கு ஒரு காம்பை விட்டு வைக்க வேண்டுமாம், மற்ற இரு காம்புகளில் பாலை விட்டு வைப்பதும் ஆகாதாம், கன்றுக்கு இரங்கி ஒரு சமயம் இவர் மற்ற ஒரு காம்பை கறக்காமல் விட,நிறைய பாலைக் குடித்த கன்று இரவு முழுக்க கழிந்ததாம்,பின்னர் இறந்து போனதாம்,இந்த மாட்டைப் பற்றிய விவரணைகள் 18 ஆம் அட்சக்கோடு நாவலில் வந்தாலும் சிறுகதையாகப் படிக்கையில் அருமையாக உள்ளது.
இதே கதையில் பஞ்சாபில் நிலவும் சாதிவெறியைப் பற்றி குறிப்பிடுகிறார், பஞ்சாபில் இறந்த எருமையின் தோலை ஒரு சாதியினர் உரித்தால் மற்றொரு சாதி அந்த தோலில் காலணி தைப்பார்களாம்,இதில் காலணி தைப்பவர் உயர்ந்த சாதியாம், இந்த செருப்பு தைக்கும் வீட்டுப் பெண் தோலை உரிக்கும் வீட்டுப் பையனை ஊரார் எதிர்ப்பை மீறி காதலித்து மணந்தால் பெண்ணின் அண்ணனோ அப்பாவோ அப்பெண்ணை கௌரவக்கொலை செய்து விடுவார்களாம்.
இந்த மனிதரின் ஒவ்வொரு பத்தியிலும் ஏதாவது ஒரு தகவல் வைத்திருக்கிறார்.
நல்லி குப்புசாமி செட்டிக்கு நலிந்தோருக்கு உதவ உத்வேகம் தந்தது அவர் தந்தையாம்,
எழுத்தாளர் அசோகமித்திரன் சகோதரி திருமணத்தின் போது ஏற்பட்ட பணமுடைக்கு அவர் கேட்காமலே சென்று இவர் தந்தை உதவி செய்தாராம்.
PS: நல்லி குப்புசாமிக்கு சிறையில் இருந்து ஒரு கைதி அண்ணா பல்கலையில் பயிலும் தன் மகளின் படிப்பிற்கு உதவ எழுதிக் கேட்டாராம், அவரும் உதவ, சிறையில் இருந்து வெளிவந்த அந்த கைதி வீட்டிற்கு கூடப் போகாமல் தன்னை வந்து பார்த்ததை இந்து பேட்டியில் பகிர்ந்திருந்தார் நல்லி குப்புசாமி
#அசோகமித்திரன்,#நல்லிகுப்புசாமிசெட்டி,#தேள்,#எருமைமாடு