"மேயுற மாட்டை நக்கற மாடு கெடுத்ததாம்"
பத்மஸ்ரீ விருது இந்தியாவின் நான்காவது உயரிய விருது, இந்த விருதை வாங்கிய நடிகர்கள் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்கவாவது வேண்டும்.
நான் வீட்டில் எந்த டிவியும் பார்ப்பதில்லை, எந்த TV pack ம் கூட என்னிடம் இல்லை, யூட்யூபில் உள்ள க்ளாஸிக் படங்களை பார்க்கவே நேரம் இல்லை, இதில் 8 tv streaming service pack வாங்கி எங்கே அத்தனையும் பார்ப்பது, என்னிடம் amazon prime கணக்கு உண்டு, அதை கொரியர் கட்டண சலுகைக்கு (delivery charge waiver ) மட்டும் பயன்படுத்துகிறேன். ஏர்டெல்லும் அப்படி இரண்டு streaming pack தந்துள்ளது, அதையும் உபயோகிப்பதில்லை.
அன்று உறவினர் வீட்டுக்குச் செல்கையில் இந்த விமல் தம்பாக்கு விளம்பரம் படம் ஓடும்போது இடையிடையே வந்தது, அதில் இந்த இரு பத்மஸ்ரீ நடிகர்கள் இந்த விமல் பாக்கை வாயில் கொட்டிக்கொள்வது போல நடித்துள்ளனர்,இது போல போதை பாக்கு விளம்பரங்கள் பார்த்து சரத்குமார் போன்ற பெயரெடுத்த நடிகர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் லஜ்ஜையின்றி தோன்றி குடும்பத்துடன் கூட்டு தற்கொலை செய்ய காரணமாகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் படங்களுக்கோ பணத்துக்கோ பஞ்சமில்லை, அப்புறம் ஏன் இந்த அற்பத்தனம்,உபி போல கல்வி அறிவு குறைந்த வறுமை மிகுந்த மாநிலங்களின் மக்களை கவிழ்க்க இந்த இரு நடிகர்களுக்கு பல கோடிகள் சம்பளம் தந்து போதைபாக்கு விளம்பரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
எத்தனை பள்ளி மாணவர்கள் குட்காவுக்கும் ,கைனி ,தம்பாக்கிற்கும் ,மாவா,ஜர்தா பீடாவுக்கும் அடிமையாகி படித்து முன்னேறும் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர், காலம் முழுக்க தன்னம்பிக்கை இன்றி உழல்கின்றனர்.
இப்படி உடலுக்கு தீங்கான லாகிரி வஸ்துவுக்கு brand ambassador ஆக நிற்பதும் மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்று.
மேலும் குட்கா பதிவு
https://www.facebook.com/750161339/posts/10159787173756340/ #போதை,#குட்கா,#தம்பாக்கு,#கைனி,#ஜர்தா,#பீடா