இது குஜராத் பருச்சி மாவட்ட கலெக்டர் சுமேரா துஷாரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
நம் மாநிலக் கல்வியில் பத்தாம் வகுப்புக்கு மொத்த மதிப்பெண்கள் 500 என்றால் குஜராத்தில் மொத்த மதிப்பெண்கள் 700 என்றிருப்பதைப் பாருங்கள்.
அவர்கள் மாநிலத்தில் மாணவர்களை அதிக அளவில் தேர்ச்சி பெற வைப்பதற்காகவும் அம்மாணவர்களின் மொத்த மதிப்பெண்களை அதிகமாகக் காட்டவும் swasthiya shashik விளையாட்டுக் கல்வி என்ற PT(Physical training ) பாடத்தை பாடதிட்டத்தில் நுழைத்து 100 மதிப்பெண்கள் அதற்கு நிர்ணயித்ததைப் பாருங்கள்,
அதே போல பத்தாம் வகுப்பிலேயே type writing பாடம் வைத்து 100 மதிப்பெண் அதற்கு நிர்ணயித்ததைப் பாருங்கள்,
இப்படித்தான் வடமாநிலத்தவர் மத்திய அரசு பணிகளில் இந்த swasthiya shashik பாடத்தின் மதிப்பெண்கள் வைத்தும் type writing பாடத்தின் மதிப்பெண்கள் வைத்தும் வெறும் பத்தாம் வகுப்பு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அதிக அளவில் உள்ளே நுழைகின்றனர்,
மேலும் குயுக்தியாக அவர்கள் +1 ,மற்றும் +2 பாடத்தை ஜூனியர் காலேஜ் என்றே சொல்கின்றனர்,
அது நம் மாநிலத்தில் வழக்கில் உள்ளது போல உயர்நிலைப் பள்ளிக்கல்வி அல்ல,
இதனால் வட மாநிலங்களில் வெறும் +2 படித்தவர்கள் கூட தங்களை காலேஜுக்கு போனவர்கள் என்றே சொல்லுகின்றனர்,
பத்து பைசா தகுதி என்றாலும் அவர்களிடம் இந்த தற்பெருமைக்கு மட்டும் குறைவிருக்காது.
அவர்கள் பாடத்திட்டத்தில் இந்தி மொழி கூட இல்லை என்பதைப் பாருங்கள்,
நாம் கல்வியை சீர்திருத்தி அதிக அளவில் மத்திய மாநில அரசுப்பணிகளில் நம் தமிழக மாணாக்கர்களை அமர வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,
ஐம்பது வருடங்களுக்கு மேல் அரசுப் பள்ளிகளில் PT சொல்லித் தருகிறோம் அல்லவா? அந்த பாடத்தை பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலுக்குள் நாமும் கொண்டு வந்தே தீர வேண்டும்,
அதே போலவே இங்கே உயர்நிலை கல்வியில் +1,+2 vocational பாடத்தில் மட்டுமே உள்ள type writing என்ற பாடத்தையும் பத்தாம் வகுப்பிலேயே ஒரு பாடமாக வைத்து நம் மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்த வேண்டும், computer skills என்று கூட இதை மாற்றி அதற்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கலாம்.
இதன் மூலம் வெறும் 250 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் இந்த இரண்டு புதிய பாடங்களில் குறைந்தது 70+70 மதிப்பெண்கள் வாங்கினாலும் கூட அம்மாணவனின் மொத்த மதிப்பெண்கள் 340 மதிப்பெண்களைத் தொடும் என்பது திண்ணம்,
அப்படி , சுமேரா துஷார் என்ற 1997 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த சுமாராக படித்த மாணவனுக்கு கூட தான் ஐஏஎஸ் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வந்ததைப் பாருங்கள்,
இது போல சுமாராக படிக்கும் மாணவர்களை அரசு வெறுமென ஐடிஐ க்கு அனுப்பினால் போதாது, அவர்களை குடிமையியல் பணிகளுக்கும் ஆட்சித்துறை பணிகளுக்கும் அனுப்ப ஆவண செய்ய வேண்டும்.
நம்மைச் சுற்றி உள்ளவர்களின் சாதனைகளில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும் , அவர்களின் தவறுகளில் இருந்தும் நாம் பாடம் படிக்க வேண்டும் .
இதை தான் விழித்திரு பசித்திரு தனித்திரு என்றனர்.