"மீசை வச்சா சந்திரன் மீசை வைக்காட்டி இந்திரன் "
தில்லுமுல்லு படத்தின் அந்த காமெடி தான் இந்த சமூக அவல நகைச்சுவையை கண்ணுறுகையில் நினைவுக்கு வருகிறது.
2005 ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இந்த மாணிக்சந்த் குட்காவை தடை செய்தனர், உடனே நிறுவனத்தினர் ஒரு உபாயம் செய்து அதை RMD ரஸிக்லால் மாணிக்சந்த் தாரிவால் என பெயர் மாற்றி சந்தையில் கடந்த 16 வருடங்களாக வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றனர்.
அமீரகத்திலும் இந்த குட்காவுக்கு தடை இருந்தாலும் எப்படியாவது கடத்தி வந்து விற்பார்கள்.
தலைமுறை தலைமுறையாக எத்தனை குடும்பத் தலைவர்களை குலக்கொழுந்துகளை சுருட்டி வாயில் போட்டுக்கொண்டார்களோ இந்த போதைபாக்கு விற்பன்னர்கள், என்றும் தொடரும் அவலம்.
ஓரு சில நாடுகளில் போதை வஸ்து தயாரிப்பவர்களை விற்பவர்களை தூக்கில் கூட ஏற்றுகின்றனர், இங்கு ராஜ மரியாதை, அவர்கள் ஃபில்ம்ஃபேர் விருதுகள் கூட பெருமையுடன் வழங்குகின்றனர்.
#சமூகம்,#குட்கா,