நிறைய சிற்றிதழ்களில், தினசரிகளில் எழுதக் கேட்கிறார்கள் புத்தகம் வெளியிடக் கேட்கிறார்கள்.
நேரமின்மையால் அங்கு எதிலும் எழுத முடிவதில்லை,புத்தகம் தொகுக்கவும் வெளியிடவும் முடிந்ததில்லை ,என் கீதப்ப்ரியன் தளத்தை 2009 ஆம் ஆண்டு முதல் கையெழுத்து பத்திரிக்கை போலவே நடத்தி வருகிறேன்,தரமான கலை, இலக்கியம், உலக சினிமா,இந்திய சினிமா, வரலாறு,கட்டிடக்கலை, கட்டுமானம் உள்ளிட்ட பல கட்டுரைகளை வகைப்படுத்தி எழுதி வருகிறேன், இது வரை எழுதி ஒரு ரூபாய் சம்பாதித்ததில்லை,
அன்று பள்ளி படிக்கையில் என் rough note தான் கைப்பிரதி , சிற்றிதழ் , அதில் கதை கவிதை ஓவியங்கள் என தோன்றுவதை அழகாக எழுதியிருப்பேன், பல முறை ஆசிரியர்களால் கைப்பற்றப்பட்டு எவையும் திரும்பக் கிடைத்ததில்லை,
அதே போல எழுதுவதால் என் வீட்டாரிடமும் நல்லபெயர் கிடைத்ததில்லை, எழுதுகையில் கைபேசியை பிடுங்காத குறை தான், இதனாலே எழுதுகையில் வரும் தெரிந்த, தெரியாதவர்கள் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போய்விடும், இதனாலேயே என்னை நன்கு அறிந்தவர்கள் எனக்கு whatsapp மட்டுமே செய்வர்.
நான் எழுதும் முறை சுவாரசியமானது, கைபேசியில் மட்டுமே கடந்த ஆறு வருடங்களாக எழுதுகிறேன், கணிணியை , மடிக்கணிணியை பணம் வரும் துறைசார் பணிகளுக்கு மட்டும் உபயோகிக்கிறேன் ,
ஐந்து நிமிடம் கிடைத்தாலும் கூட வீணாக்குவதில்லை, new post திறந்து only me ல் சிறுக எழுதி , எழுதி சேமித்து , பின்னர் அதை மொத்தமாக வெட்டி வேறு ஒரு new post ல் இட்டு public post ஆக்கி படங்கள் தரவிறக்கி அல்லது சொந்த படங்களையோ தேடி இணைத்து fb ல் நீளமாக பதிவிடுகிறேன், கையோடு blogger app ல் உடன் பதிவிடுகிறேன், சில சமயம் samsung notes ல் new note திறந்து எழுதி வெட்டி ஒட்டுவதும் உண்டு.
இதனால் தான் வெளியில் எங்கும் யார் கேட்டும் எழுத முடிவதில்லை, எதுவும் எழுத தோன்றாத போது நான் எழுதிய பதிவுகளை மேம்படுத்தி edit , tweak செய்து கொண்டே இருப்பேன், காரணம் முதலில் நான் படிக்கவே இங்கு எழுதுகிறேன்.
வருடா வருடம் புத்தக திருவிழாவில் புத்தகம் வெளியிடுவது ஒரு ஓட்டப் பந்தயம் போன்றது, இன்றும் கைக் காசு இட்டு எழுத்தாளர் தர வேண்டி உள்ளது, புத்தகம் விற்கிற கணக்கில் வெளிப்படை தன்மை இல்லை, இது போல பல பிரச்சனைகள், அது எனக்கு ஒத்து வராது.
என் வலைப்பதிவில் குறிச்சொற்களாக (Label) பதிவுகளை வகைப்படுத்தி தொகுத்துள்ளேன், இங்கே சுட்டி
http://geethappriyan.blogspot.com/