ஐம்பது ஆண்டுகளாக கவனிப்பார் அற்றுக் கிடக்கும் திருப்பாச்சூர் ஸ்ரீவாசீஸ்வரர் கோவில் நூற்றுக்கால் மண்டபத்தின் இன்றைய நிலை இது,இதை Angkor wat கோவிலின் Ruins போல பொதுமக்களுக்கு exhibit செய்யலாம்,அல்லது ஐம்பது ஆண்டுகளாக இதை வெறும் வெள்ளை மட்டும் அடித்து ஏமாற்றியது போல ஏமாற்றாமல் மண்டப பராமரிப்பு பணிகளைத் துவக்கலாம்.
"எத்துநூல் எண்ணாயிரம் பொன்" என்பார்கள், அதாவது கோவில் பணி என இறங்கிவிட்டோமே என்றால் அதற்கு வேண்டி வாங்கிய marking threat budget மட்டும் எட்டாயிரம் பொற்காசுகள் வரும் என்றால் மற்ற செலவினங்களைப் பாருங்கள் என்பதற்கு வேண்டி சொன்ன பழமொழி அது.
இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் தான் அன்று திருவிழாக்களில் வாசீஸ்வர சுவாமி , தங்காதலி அம்மன் உற்சவர்கள் எழுந்தருளுவார்களாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெய்த பெருமழையில் கூரை பழுதாகி விழுந்து மண்டபத்தின் கால்களும் விழுந்து, தரைகள் முழுவதும் சதுரங்க வேட்டை பாணி திருடர்கள் புதையலுக்கு கொத்திக் கிளறி போட்டுவிட்டனராம்.
PS:கற்கூரைக்கு முதல் எதிரியே பறவையின் எச்சம் தான் ,விதை வேராக மாறி கூரையை ஊடுருவி நாளடைவில் மிகப்பெரிய சேதாரத்தை உண்டாக்கிவிடும், பழம்பெரும் கோயில்களின் கூரைகள் மாதா மாதம் பராமரிக்கப்பட்டு நீர் தேங்காமல் சுத்தம் செய்யப்பட வேண்டும் ,
அங்கு முளைக்கும் செடிகள் அமிலம் கொண்டு அழிக்கப்படவேண்டும்,
#திருப்பாச்சூர்,#திருப்பாட்சூர்,#திருப்பாசூர்,#நூற்றுக்கால்மண்டபம்