tree strucked by fire / தீப்பிடித்த மரம்
மர்ம விபத்தில் இந்த பிரம்மாண்டமான தலவிருட்ச ஆலமரம் பாதி எரிந்த நிலையில் மீதி பிழைத்துள்ள அதிசயத்தை திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கண்டேன்,
இதன் மூலம் உயரம் மிகுந்த கோவில் தல விருட்சங்களுக்கு பாதுகாப்பு வேலி அவசியம், அதன் அடியில் விளக்கேற்றுவது, கற்பூரம் ஏற்றுவது, எண்ணெய் கொண்டு பெயர் எழுதுவது, கத்தியால் தேர்வு எண் எழுதுவது, காதலர்கள் பெயர் எழுதுவதை எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டும் என புலனாகிறது,
PS: இந்த தீ விபத்து பற்றிய செய்தி எந்த மாவட்ட தினசரியிலேனும் வந்திருந்தால் தெரியப்படுத்தவும் என கேட்டேன் நண்பர் மீனாட்சி சுந்தரம் இந்த எரியும் வீடியோ லிங்கை தந்தார்.
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=Yco4hsR3gNU
கோவிலில் மரம் பற்றி கேட்டதற்க்கு இடி விழுந்து மரம் சேதமானது என சொன்னார்கள், ஆனால் இது மனிதர்களின் விஷமித்தனத்தால் நிகழ்ந்த விபத்து என கேட்கையில் மிகவும் கோபம் வருகிறது #ஆலமரம்,#திருவாலங்காடு,#தலவிருட்சம்