Peace offering :
இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது, ஆங்கிலேய அகராதிப்படி "ஊடலுக்குப் பின் ஒருவருடன் சமாதானமாக வேண்டி தரும் பரிசு"
பைபிளின் படி உயிர்பலி,தியாகம்,கமல் பரிசு என்றே இவ்வார்த்தையை அணுகியுள்ளார்.
சாகேத்ராம் மைதிலிக்கு தன் பெட்டிக்குள் இருந்து முன்னாள் மனைவி அபர்ணா வரைந்த ஓவியத்தை எடுத்துத் தருகிறார் peace offering அபர்ணா வரைந்தது என்கிறார்.
அவள் சக்களத்தி வரைந்ததை உள்ளே சென்று ஒளித்து வைத்து விட்டு தான் வரைந்த ஆண்டாளை தன் கணவனுக்கு peace offering, ஆண்டாள் ,நான் வரைந்தது என்று தருகிறாள்,( மீண்டும் தன்னை ஆண்டாளாகவேனும் ஏற்கும் விண்ணப்பம் அது) மைதிலியிடம் என்ன ஒரு possessiveness ததும்பும் காட்சி அது?!.
காளி ஓவியம் கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணம் நீண்டது, அதை day light தொடங்கி dusk light வரை நீளமாக காட்சிப்படுத்தியிருப்பார் கமல்,இடையிடையே மனைவி அபர்ணாவுடனான romantic outing montages,direct action day victims உடனான encounter ,
கல்கத்தா வந்த காந்தியையும் அவரை தன் வீட்டில் வரவேற்று தங்க வைத்திருக்கும் Huseyn Shaheed Suhrawardy என்ற வங்க அரசியலவாதியையும், சாகேத்ராம் நாக்கைப்பிடுங்குவது போல கேள்வி கேட்பது,அதன் பின் அப்யங்கருடனான திடீர் சந்திப்பு என நீண்ட பயணம் அது, இதை எல்லாம் இன்று மீண்டும் அவரால் செய்ய முடியுமா? தெரியவில்லை
( வங்க அரசியல்வாதி Huseyn Shaheed Suhrawardy ஐ butcher of Bengal (கசாப்புகாரன் )என்றே சரித்திரம் சொல்கிறது )
ptst-post traumatic stress disorder என்னும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சாகேத்ராம் தன் முதலிரவு அறையில் இருந்து தெறித்து வெளியேறி அலைந்து திரிந்து ஒருவழியாக தான் குடியிருந்த கல்கத்தா நீல்கமல் மேன்சனுக்கு வருகிறார், தன் பழைய palatial வகை வீட்டில் சென்று கதவைத்தட்டி சாகேத்ராமை சந்திக்க வந்ததாக அங்கே இப்போது குடியிருக்கும் evk நாயரிடம் (U.B.G. Menon ) கூறுவார் கமல்,
இறுதியாக நாயரிடம் அந்த சாகேத்ராம் கிடைப்பாரா? தேடுவதில் பிரயோஜனமில்லைன்னு சொல்றீங்களா? !!! என அப்பாவியான முகத்துடன் கேட்பார், அவர் அரை நம்பிக்கையுடன் தேடலாம்,தப்பில்லை என்றவர் " உங்களுக்கும் சாகேத்ராமுக்கும் என்ன உறவு? " என மெதுவாக கேட்க ,
இவர் " சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான உறவு " என்று நிதானமாக சொல்வார்.
அவர் ரொம்ப நல்லவர் என்று கழிவிரக்கத்துடன் தனக்கே சான்றும் தருவார்,
அங்கே அபர்ணா வரைந்த கல்கத்தா காளி படத்தை சுவற்றில் பார்த்தவர் அதை எனக்கு தருவீர்களா? என்பார்,நாயர் இவரை வினோதமாகப் பார்க்க," I'm willing to pay for it " என்று மிக அழகாக பவ்யமாகக் கேட்பார்,
இந்த வசனத்தை நான் அப்படி ரசித்து மனப்பாடம் செய்து கொண்டேன், எங்கே எல்லாம் அதை பிரயோகிக்க சாத்தியமுண்டோ இந்த இருபது வருடங்களில் அங்கெல்லாம் அதே உச்சரிப்பில் பிரயோகித்துள்ளேன்.
#peaceoffering,#imwillingtopayforit,#ஹேராம்,#கமல்ஹாசன், #kamalhaasan,#ஆண்டாள்,#கல்கத்தாகாளி,#ptst