திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பார்கள், புராதான இந்துக்கோவில்கள் திராவிட ஆட்சியில் எந்த குறையுமின்றி மராமத்து செய்யப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்படுகின்றன என்பதற்கு உதாரணம் இது .
இந்த முதல் நான்கு படங்களில் இருப்பது குன்றத்தூர் முருகன் கோவிலின் சமகால படித்துறை மண்டபம் மற்றும் கோபுர வாசல் முன் மண்டபம், 37 ஆண்டுகளுக்கு முன் இந்த மண்டபங்கள் எப்படி வானம் தெரியும் படி நடுவில் கூரை இன்றி இருந்துள்ளது பாருங்கள்.இப்போது சேவார்த்திகள் அமரவும் , திருப்பல்லக்கு இறக்கி வைக்கவும், மக்கள் வேண்டுதல்கள் செய்யவும் வசதியாக முழுக்க கூரை அமைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.
நல்லவனுக்கு நல்லவன் (1984) திரைப்படம் தலைவரின் நடிப்பில் மிகவும் பிடித்த படம், இது போல வயதான வேடங்கள் தலைவருக்கு மிகவும் பாந்தமாக பொருந்தும்.