"தெரியும்டா!!! பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே நீ சண்டியராச்சே!!!" பேய்க்காமனைப் பார்த்து கொத்தாள தேவர் சொல்லும் வசனம்.
ஒரு படம் 17 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் இருந்து நீங்காமல் இத்தனை fresh ஆக இருப்பதற்கு காரணம் அதன் நம்பகத் தன்மையான டீடெய்ல்கள்,அதை இடைச் செருகல் இன்றி உருத்தல் இன்றி செய்ய வேண்டும்.
இந்த பெரிய கோளார் பட்டி காவல் நிலையக் காட்சி பாருங்கள், இன்ஸ்பெக்டர் பேய்க்காமன் சட்டையில் பேட்ஜ் பாருங்கள்(இது நன்கு zoom செய்து எடுத்தது), அவர் பணியில் இருப்பது குற்றப்பரம்பரை பாரம்பர்யம் கொண்ட சரகத்தில் உள்ள காவல் நிலையம், இவர் பின்னந்தலையில் பிரதியைப் பிடிக்கச் சென்று வாங்கிய வெட்டுக்கள் பாருங்கள்,
இவர் இருக்கைக்கு வலது புறம் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் எழுதிய அழுக்கடைந்த ஒரு பழைய பலகையில் இன்ஸ்பெக்டர் குற்றப் பத்திரிக்கை எழுதத் தோதாக என்னென்ன குற்றத்துக்கு என்னென்ன code என்ற விபரங்கள் பாருங்கள்,
கொலை முயற்சி
கலகம்
காயம்
கற்பழிப்பு
மோதல்
மானபங்கப்படுத்துதல்
என நீள்கிறது
அப்பலகையை இலை மறைவு காய் மறைவாக காட்சிப்படுத்தியதில் இக்காட்சிக்கு கூடுதல் நம்பகத் தன்மை கிடைத்து விடுகிறது, இப்படத்தின் கலை இயக்குனர் பிரபாகர் படம் முழுவதும் காட்சிக்கு காட்சி tremendous work செய்துள்ளார்.
இப்படத்திற்கு தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்த தடைவிதிக்கப்பட்டதால் கிண்டி கேம்ப கோலா வளாகம் மற்றும் இன்றைய மணப்பாக்கம் DLF IT park இருக்கும் சிவாஜி தோட்டம் தான் படப்பிடிப்பு தளங்கள்,அதில் ஒரே ஒரு வீட்டை பல விதமாக பிரித்து மாற்றி தத்ரூபமாக அமைத்து நம்பும் படி காட்சிப்படுத்தி தடை வாங்கியவர்களுக்கு நடுவிரலைக் காட்டியுள்ளனர்.
#விருமாண்டி,#கமல்ஹாசன்,#பேய்க்காமன்,#பிரபாகர்,#போலீஸ்_ஸ்டேஷன்,#சண்முகராஜன்
#விருமாண்டி,#கன்னியும்_காளையும்,#சொரிமுத்து,#டிவிஎஸ்_50,#ரயில்வே_க்ராஸிங்,#ரயில்வே_கேட்,#சின்னக்கோளார்பட்டி,#சிவாஜி_தோட்டம்,#சிவாஜி_கார்டன்,
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்