மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மூலவர், கருவறை சுவற்றில் திருக்கல்யாண (சோமாஸ்கந்தர்) கோலம் பாருங்கள்,
நம் மயிலை கபாலீசுவரர் போலவே மேற்கு பார்த்த சிவன் ஆதலால் அத்தனை சக்தி மிகுந்த பிரார்த்தனை ஸ்தலம், உள்ளே செல்ல 2₹ அனுமதி சீட்டு வாங்கி சட்டையை கழற்றி விட்டு உள்ளே கர்ப்பகிரகம் வரை செல்ல முடியும், சாதா நாட்களிலேயே அத்தனை கூட்டம் அள்ளும்,
25 சர விளக்குகளின் இயற்கை வெளிச்சத்தில் காணும் இறை தரிசனம் மனதை லேசாக்கி விடும்.
சிறுவயதில் என் பாட்டியுடன் சென்று கோயில் பிரகாரத்தில் எறும்புகளுக்கு அச்சு வெல்லம் வைத்து வருவேன், சிறுவன் என்னை துணைக்கு அழைத்துப் போய் தன் பக்தியை மடைமாற்றி விட்டிருக்கிறார் என் பாட்டி, இங்கு தல விருட்சம் அபூர்வமான பத்து இதழ் வில்வம் (தசதலவில்வபத்ரம்).
மதுரையின் பஞ்சபூத சிவதலங்களில் இது மண் ஸ்தலம், பூலோக கைலாஸம் என்கின்றனர்.